Pages

குறள்

Saturday 4 December 2010

ஓடும் ரயிலில்....

ங்காவது வெளியூர் பயணமென்றால் கையில் காமெரா இல்லை என்றால் எதையோ இழந்ததை போலிருக்கும். அதுவும் நல்ல காட்சிகளை பார்த்துவிட்டால் அவ்ளோதான் மிஸ் பண்ணிட்டோமே என்றிருக்கும். அதனால் காமெரா இல்லாமல் வெளியூர் செல்வது குறைவுதான்.

அப்படிதான் பெங்களூர் சென்றபொழுது ரயிலின் கதவோரம் சாய்ந்து கொண்டு கொஞ்சம் ரிலாக்சாக   ரிஸ்க் எடுத்துக்கொண்ட படம் தான் இது. இதில் ரிஸ்க் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆர்வத்தின் காரணமாக கதவோரம் சாய்ந்து கொண்டிருப்பதால் ரயிலின் வேகத்தால் கதவு வேகமாக வந்து மூடிக்கொள்ளலாம். அதனால் ரயிலின் கதவோரம் நின்று இது போன்ற ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டாம்.

இந்தப்படம் ஸ்லோ ஷட்டருடன் எடுக்கப்பட்டதென்பது பார்த்தவுடனே தெரிந்த விஷயம் தான். இதமான வெளிச்சமிருந்தால் ஸ்லோ ஷட்டரை போட்டுகொள்ளலாம். அதிகமான சூரிய வெளிச்சம் உள்ள போது  aperture தேவையான  அளவு குறைத்து கொண்டு ஸ்லோ ஷட்டர் போட்டுகொள்ளலாம். 
இங்கே ISO 100 , SPEED 1/5, APR 1/14 பயன்படுத்திவுள்ளேன்.

இத்தனை வேகமான சூழலிலும் காமெரா ஸ்பீட் 5 போட்டு எடுத்த போதும் படம் ஷேக் ஆகாமல் வந்திருந்தது எனக்கே ஆச்சர்யம் தான்.

எல்லாம் செரி ஓடும் ரயிலில் தூங்கிவிட்டால் காமெராவும் ஓடிவிடும். கவனம் !

Tuesday 16 November 2010

கவிதை எழுதிய கடலோரம்

பாசத்திற்குரிய நமது பாரதிராஜா ஓயாத அலைகளின் கடலோரத்தில் கவிதை எழுத வைத்து சின்னப்பதாசை பாஸ் செய்ய வைத்தது இந்த முட்டம் கடலோர கிராமத்தில்தான்.
மேடும் பள்ளமுமான சாலைகள், உயரமான பாறைகள், செம்மண் சூழ்ந்த நிலபரப்புகள்,
வரவேற்கும் லைட் ஹவுஸ், வளைந்து நெளிந்த கடற்கரை என்று அடுக்கிகொண்டே போகலாம்.
இன்று சுற்றுலா கைவசமுள்ள இந்த வியாபார ராவாரமில்லாத கடற்கரைக்கு வந்து செல்வோர் பலர். 
குமரிக்கு வரும் சினிமாகாரர்களுக்கு ஏற்ற இடம் மட்டுமல்ல. பல சினிமாக்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
அருகில் குன்று போல் குவிந்து கிடக்கும் செம்மண் பாறைகளும் காமெராகாரர்களுக்கு மிகவும் பரிட்சியபட்ட ஓன்று. இங்கு பல சினிமாக்களின் சண்டை காட்சிகள் மற்றும் நடனங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
எங்கள் ஊர் புகைப்படகாரர்கள் திருமண தம்பதியர்களை அழைத்து வந்து புகைப்படமெடுத்து திருமண ஆல்பங்களை அழகு படுத்துவார்கள்.
அபாயமான பாறைகளும் இங்கே உண்டு. சுனாமிக்கு பதம் பார்க்கப்பட்ட ஊர்களில் முக்கிய இடம் பிடித்த பெயரும் உண்டு.
சன்ரைஸ் சன்செட் காண்பதற்கும் மிக அருமையான இடம்.
இங்கே எடுக்கப்பட்ட இந்த பணரோமாவைதான் நாம் பார்க்கிறோம். பணரோமாவை பற்றி ஏற்கனேவே சொல்லப்பட்டுவிட்டது.


Monday 1 November 2010

சேட்டையர்கள்

சேட்டையர்கள் என்றதும் மீண்டும் குழந்தைகளை பற்றி ஏதோ எழுதபோகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். 
காலை நேரங்களில் சிலருக்கு கோழி கூவினால் தான் தூக்கமே  கலையும். எங்கள் வீட்டை சுற்றி கோழிகளை விட அணில் கூட்டங்கள் தான் அதிகம். அவர்களின் கீச்சு குரலில் நம்மை எழுப்பிவிடுவார்கள். 
காலை நேரங்களில் உணவுக்காக ஓடியாடி வேலைபார்ப்பதையும் அப்பப்போ தங்களது சேட்டைகளையும் செய்து நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள். சிலருக்கு மீன் வளர்த்து அதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் கவலைகள் எல்லாம் ஓடோடிவிடும். அதுபோலதான் இவர்களின் சேட்டைகளையும் பார்த்துகொண்டிருந்தால் ஒரு சுகம்.
அதிகாலையில் எழுந்து இவர்கள் நடவடிக்கைகளை படம் பிடிப்பது வழக்கம்.
காலை நேரமாவதால் வெளிச்சங்கள் குறைவாகவே இருக்கும். சூம் லென்சை மாட்டி விட்டு அதன் வேகமான துள்ளல்களை படம் பிடிக்கும் போது ஷேக் ஆகிவிடுவதுண்டு. ISO அதிகமுள்ள கேமராக்களுக்கு  இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இங்கே காணப்பட்டிருக்கும் படங்களை நான் எடுத்த விதமே வேறு! 
பொதுவாக இப்பொழுது காமேராக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு முக்கிய தீப்பெட்டி போன்ற ரிமோட் எனப்படும் கருவிதான் ஒரு பிளஸ் பாயிண்ட் . சில காமேராக்களுக்கு ஒயருடன் கூடிய ரிமோட் கிடைக்கும். சில காமேராக்களுக்கு கார்ட் லெஸ் ரிமோட் கிடைக்கும்.
இந்த ரிமோட்டுகளை பொதுவாக காமெரா அசையாமல்  ஸ்லோ ஷட்டர் பயன்படுத்தும் இடங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதாவது இரவு விளக்குகள், ரோடு விளக்குகள், மூன் லைட் போன்றவற்றை படம் பிடிக்க பயன்படுத்துவது வழக்கம். 
நாம்  அணில்களை படம் பிடிப்பதற்காக காலை நேரத்தில் சூம் லென்சை மாற்றிவிட்டு ஸ்டாண்டில் காமெராவை இணைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்துவிட்டு சிலமணி நேரம் காவல் இருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக நான் வைத்திருந்த ஆகாரத்தை  மோப்பம் பிடித்துகொண்டு வரத்துவங்கினர். நம்மை பார்த்தால்  ஓடிவிடுவார்கள் அதுமட்டுமல்ல காமெராவின் கிளிக் சப்தம் கேட்டாலும் போதும் பறந்தே விடுவார்கள். அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நாம் சூம் லென்சில் எடுத்துவிடலாம் ஆனால் அதை விட நெருக்கமாக நமது கேமராவை கொண்டு செல்வது என்றால் இவர்களுக்கு  நம்மை கண்டால் பயம். இங்கே எனது சூம் லென்சின்  ஆட்டோ போகஸ் இயங்காது. முழுக்க முழுக்க மானுவல்   போகஸ் தான். ரிமோட் பயன்படுத்தும் பொழுது அணில் கொஞ்சம் அங்கே இங்கே என்று இடம் மாறினாலும் ஏமாற்றம் தான் மிச்சம்.
இந்த REMOTE சென்னையில் கிடைக்கிறது. நிக்கான் மற்றும் கானன் காமேராக்களுக்கும் கிடைக்கிறது. சில கேமராக்களுக்கு ஏற்ப மாறுபடுவதால் உங்கள் காமெராவின் மாடல் நம்பரை கூறி வாங்கிகொள்ளலாம்.
காமேராவிலும் ரிமொடிற்கு  என்று ஒரு ஆப்சன் இருப்பதால் அதை போட்டுகொண்டால் தான் ரிமோட் வேலை செய்யும். 
எனது ஆர்குட் பகுதியில் 250 அணில் படங்கள் இணைத்துள்ளேன். ஆனால் அதில் ரிமோட்  பயன் படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை விட ரிமோட் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் அதிகம் இருக்கும்.


Thursday 28 October 2010

தீப ஒளி

லகலக்கும் பண்டிகை நாட்கள் துவங்கி விட்டது. புத்தாடைகளும் பலரக பலகாரங்களும்
சிறப்பிக்க போகும் இந்த நாட்களில் மற்றொரு பிரதிநிதியாய்  பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் தங்கள் பங்கிற்கு உலகிற்கு பண்டிகை நாட்களை வண்ணமயமாக்க துடித்துக்கொண்டிருகின்றன.
கொண்டாட்டங்களுக்கு காமெராவை மூடியா  வைக்கமுடியும். சுற்றி சுற்றி படமெடுத்தலும் உடனே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேகமாய் அனுப்பி விட்டு சந்தோஷம் காண்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ண்டிகை கால நேரங்களில் மின்னிடும் இந்த ஒளி வெள்ளங்களை படமெடுத்து கொள்ள எல்லாருக்கும் ஆசைதான். இதையும் மனதில் கொண்டு காமெரா தயாரித்தவர்கள் அதற்கென 'FIREWORKS எனப்படும் ஆப்சனை காம்பாக்ட் காமேராக்களில்  தந்திருக்கிறார்கள். ஆனால் அதை கொண்டு ஒளி வெள்ளங்களைதான் படமெடுக்க முடியுமே தவிர நம்மையும் சேர்த்து படமெடுக்கலாம் என்று நினைத்தால் கொஞ்சம் கஷ்டமே. ஏனென்றால் ஸ்லோ  ஷட்டருடன்  கூடிய அந்த ஆப்சனை போட்டால் நமது அசைவால் படம்  ஷேக் ஆகிவிடும்.
ஒளிகளை படம் எடுக்கும் போது கூட  நமது கை அசையாமல் இருக்க வேண்டும்.
இதற்காக ஸ்டாண்ட் பயன்படுத்தினால் இன்னும் நல்லது. மேலே காட்டப்பட்டுள்ள படமும் சாதாரண காம்பாக்ட் கமெராவில் தான் எடுத்திருந்தேன் (canon A520 4 mp)
கை அசையாமல்  இருந்தால் ஒரு 'O' மட்டுமல்ல சில எழுத்துக்களை  கூட எழுதியும் விடலாம்.
காம்பாக்ட் காமெராகாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தங்களுடைய காமெராவின் பிளாஷ் ஆப்சனை அனைத்து விடவேண்டும். பிளாஷ் ஆப்சன் அனைப்பதற்கு பிளாஷ் சிம்பல்களில்  பிளாஷ் வடிவத்தை வெட்டியது போல் இருக்கும் அந்த  சிம்பலை போட்டுகொண்டால் போதுமானது. நான் குறிப்பிட்டிருக்கும் முந்தய படங்களில்  டேபிள்டாப் சிலவற்றை தவிர எதிலும் பிளாஷ் பயன்பாடுகளே இருக்காது. பொதுவாகவே ஒரு நல்ல படம் தருவதற்கு நேரடியான பிளாஷ் உகந்தது அல்ல
வானத்தில் மின்னிடும் வேடிக்கைகளை  சிறிய காமேராக்களில் சிறிது சூம் செய்து கூட எடுத்துகொள்ளலாம். அதற்காக வானத்தில் ராக்கெட் விடுறோமே லைட் வெளிச்சம் இல்லையே என்று ப்ளாஷை போட்டீர்கள் என்றால்  ஒரு பயனும் கிடைக்க போவதில்லை
DSLR கமெராவில் பயணிப்பவர்கள் ஸ்டாண்ட் உபயோகித்து கொள்ளலாம். ISO கொஞ்சம் அதிகம் போடவேண்டி இருக்கும். வெளிச்சத்தை பொறுத்த விஷயம்.
ஸ்டாண்ட் உபயோகித்து நீங்களும்  உங்கள் பேரை கூட எழுதிப்பார்க்கலாம்.
ஆக இந்த பண்டிகை காலங்களில் மத்தாப்புக்களுக்கு  ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும் என்பதை நம்பலாம்.
அனைத்து அன்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

Tuesday 26 October 2010

"வட்டமான கோட்டை"

திருநெல்வேலியிலிருந்து காவல் கிணறு வழியாக கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது வட்டகோட்டை. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இங்கேயும் ஒரு விசிட் அடிக்கலாம். உள்ளே நுழைந்ததும் பச்சை பசேலென அழகான புல் தரையை அமைத்துள்ளனர். இன்று வரையிலும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்கள்.அதன் மத்தியில் காணப்படும் படிக்கட்டு வழியாக மேலே சென்றால் கடலை பார்க்கலாம்.  கோட்டையின் கீழ் பகுதி கடலில்   புதைத்து வைக்கப்பட்டதைபோல் அழகாக இருக்கும். இருபுறங்களிலும் மிதமான அலைகள். ஒருபுறம் சுற்றிலும் மலைகள் மற்றும் காற்றாடி விசிறிகளின் தோற்றம் கண்ணை கவரும். கருப்பு நிற மணலும், உப்பளங்களும் சுற்றி உள்ளன.
கோட்டையின் முகப்பு பகுதியை பனரோமா  எடுத்துக்கொண்டேன்.
ஒரு முழு சுற்றளவு  பனரோமா  இது. நீளவாக்கில் உள்ள இந்த படத்தை பெரிதாக போட்டு வட்டமாக சுற்றி  வைத்து விட்டு உள்ளே நின்று பார்த்தால் அந்த கோட்டையினுள் நிற்பது போன்ற உணர்வு இருக்கும். 
ஏற்கவே பனரோமாவை பற்றி சொல்லி இருந்தாலும். இன்னும் சில டிப்ஸ் இங்கே தர விரும்புகின்றேன். 
பொதுவாக காம்பக்ட் காமராக்களில்  பனரோமா  ஆப்சன்  வரத்துவங்கி விட்டதால் அது இப்பொழுது ஈசியாகிவிட்டது பனரோமா  மோடைபோட்டு விட்டு இது போன்ற நல்ல காட்சிகள்  உள்ள இடத்தை தேர்வு செய்து உங்கள் படபிடிப்பை துவக்குங்கள்.
முதல் கிளிக் செய்ததுமே  கமெராவில் காண்பிக்கும் இரண்டுகட்டங்களில் ஒன்றில் முதலாவதாக எடுத்த படம் அப்படியே நிற்கும். இரண்டாவது எடுக்கபோகும் லொக்கேஷனை  அதற்கு நேராக கொண்டு நிறுத்தி பார்த்தால்   எங்கே மேட்ச் ஆகுதோ அதன் பின்னர்  கிளிக் செய்து கொள்ளலாம்.  இப்படியே முழு சுற்றையும் படம் பிடித்து கொள்ள வேண்டியது தான். இங்கே ஸ்டாண்ட் உபயோகிப்பது மிக அவசியம்.
மேலே உள்ள படமும் சரி  நான் எடுத்த பல படங்களிலும் ஸ்டாண்ட் உபயோக படுத்தப்படவில்லை தான். எனினும் புதிதாய் முயற்சி செய்பவர்கள் ஸ்டாண்ட் பயன் படுத்துவது நல்லது.காலை  நேரமோ அல்லது மாலை நேரமோ இது போன்ற படங்கள் எடுக்கும் பொழுது சிறிது வேகமாக ஒவ்வொரு பிரேமும்  கடந்திருக்க வேண்டும். இல்லை என்றால்  லைடிங்கில்  வேறுபாடுகள் படத்தில் தெரியலாம்
இவற்றை படமெடுத்தால் மட்டும்  போதாது. ஸ்டிச்சிங் செய்யப்படவேண்டும் போட்டோஷாப்  தெரிந்தவர்களுக்கு நோ ப்ரோப்ளம்  ஈசியாக ஸ்டிச்ச் செய்து விடலாம்.  மற்றவரகள் இதெற்கென சாப்ட்வேர்கள் ஆன்லைனில் தேடிக்கொள்ளலாம்.
எனது மேலும் சில பனரோமா படங்களுக்கு ....
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1269421348    

Friday 22 October 2010

நெருப்....."பூ".......

ண்ணீரில் பூ பூக்கலாம் தண்ணீரில் நெருப்பு பூக்குமா.......
டத்தை பார்த்தால் நமது போட்டோ ஆர்வலர்கள் கொஞ்சம் பெட்ரோலை கோப்பையில் ஊற்றி தீவைத்துவிடபோகிறார்கள். நண்பர்களே அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள்.....
மைதியான சூழலில் கொஞ்சம் இது போன்ற விளையாட்டுகளில் (?) ஈடுபடுவது 
நமது வழக்கம். அதிலும் தீயுடன் விளையாடுவதென்றால்......
இந்த படத்தில் இரண்டிற்கு மேற்பட்ட டெக்னிக் உள்ளது. வழக்கம் போல் குடை விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு நிற தண்ணீரும் ஒய்ன் கப்பும் தாயாராக்கிவிட்டு லைட்டிங்  டெஸ்ட் எல்லாம் முடித்து விட்டு க்ளைய்மாக்ஸ் கட்டத்துக்குள் வந்தேன். 
பெட்ரோலை விட தண்ணீர் எடை கூடிய சமாசாரம் நினைவில் வந்ததுதான் இந்த படத்திற்கு மிக முக்கிய பாயிண்ட். ஓகே பெட்ரோல் சில நிமிடங்களில் மறைந்தே போய் விடும். எல்லாம் சில நொடிகளில் நடக்க வேண்டிய விஷயம். சாட் ரெடி. கோப்பையில் தண்ணீர் விடப்பட்டது, மேலே கொஞ்சம் பெட்ரோல் விடப்பட்டது  தீக்குச்சியை   பற்றவைத்து கோப்பையினுள்ளும் போட்டாகிவிட்டது. குபீர் என்று தீயும் தனது வேகத்தை காட்டதுவங்கிது. வேகமாய் ஒரு கல்லை அதனுள்  போட்டு உடனே கிளிக் செய்து விட்டேன். இவ்வளவும் சில நொடிகளில். அதுவும் தனிமையில். இது போன்ற நெருப்புடன் கூடிய விளையாட்டுகளை செய்வதாக இருந்தால் கவனமாக செய்யவும். ஒரு சில சொட்டு பெட்ரோல் பயன்படுத்தினால் போதுமானது.

Thursday 21 October 2010

புதயலைதேடி...


மாவட்ட வாரியாக புகைப்பட சங்கங்களின் சார்பில் தமிழக கலாச்சாரம் என்ற தலைப்பில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் போட்டி நடத்தியிருந்தார்கள். வழக்கம் போல் எங்கள் மாவட்ட சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியிலும் நான் கலந்து கொண்டேன்.

இதற்காக போட்டோ எடுப்பதற்கென்று ஆலோசனையில் இருந்தபொழுது எங்கள் ஊரின் அருகாமையில் பானை செய்யும் இடத்தை தேர்வு செய்து அங்கு போவதற்கு அனுமதி கேட்பதற்காக நான் படித்த கல்லூரியின் இன்றைய தாளாளரின் வழியாக அனுமதி கேட்கலாம் என்று  அனுகியபோது அவர் எப்பொழுது படம் எடுக்க வருகிறீர்கள் என்று மட்டும் கேட்டு விட்டு 
அவரே நேராக கூட வந்து விட்டார். நான் கேட்டதோ அனுமதி மட்டும் தானே ....! அவரோ ஒரு பாதிரியாரும் கூட!
நிஜமாகாவே ஷாக் ஆகி அவரது நேரத்தை மிட்சபடுத்துவதர்காக வேகமாக களத்தில் குதித்தேன்.
உள்ளேயோ மிகவும் லோ லைட். வழக்கம் போல் ISO கூடுதலாய் போட்டு படம் எடுத்துவிட்டு நகர்ந்தேன். 
கிட்டத்தட்ட ஐந்து  படங்களை தேர்வுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன். 
இரெண்டாம் பரிசு என்று சேதி வந்ததும் ஒரு ஆனந்தம். ஆனால் பரிசு இதற்கல்ல வேறு ஒரு படத்திற்கு. 
ற்ற படங்கள் தேர்வு செய்யப்படாததின் காரணங்களை நடுவர் விளக்கிகொண்டிருந்தார்.
கிராப் செய்துதான் அனுப்பியிருந்தேன். அதில் பச்சையாக ஒரு பாலிதீன்  கவர் கவர் இருந்தது தான் காரணம். 
ப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களை மனதில் கொண்டு தேவைஇல்லாத வேஸ்ட் பொருட்கள் கிடந்தால் மாற்றி விட்டு படங்களை எடுத்து விட்டால் போட்டிகளுக்கு தயாராகிவிடலாம்.


மழைக்குள் குடை

குடை மிளகாய் படம் எடுப்பதற்காகவே பலவர்ணங்களில் வாங்கி வந்திருந்தேன். 
மூன்று குடை மிளகாயையும் கருப்பு பாலிஷ் பேப்பரில் வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து(SPRAY BOTTLE உதவியுடன் ) டாப் ஆங்கிளில் ஊடுருவல் வெளிச்சம் கொண்டு எடுக்கப்பட்ட படம். 
ன்னல் வழியாக அல்லது கதவுகள் வழியாக வரும் வெளிச்சத்து ஒளிகளுக்கு நிகர் எதுவும் இல்லை. படத்திற்கு தேவையான ஒருபுற ஒளியும் மறுபுறம் தேவையான நிழலும் தந்து படங்களை மெருகூட்டிவிடுகிறது. 
பாலுமகேந்திரா படங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். அப்படி ஒரு ஒரிஜினாலிட்டி அவரது  படங்களில்.பொருட்களை மட்டுமன்றி மனிதர்களையும் இப்படிப்பட்ட வெளிச்சத்தில் படம் எடுப்பது தனி அழகு தான். 
இது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஸ்டாண்ட் உபயோகம்  செய்து ISO மிகவும் குறைத்து போட்டு ஸ்லோ ஷட்டர் போட்டு எடுத்தால் படம் மிகவும் சிறப்பாய் வரும்.
தேவைபட்டால் ஒரு வெள்ளை காகிதத்தை நிழல் வரும் இடங்களில் பிடித்துக்கொண்டால் கொஞ்சம் ஷேடையும் குறைத்துகொள்ளலாம்.
காம்பாக்ட் கேமரா நண்பர்கள் இது போல் படம் பிடிக்க ஆசைபட்டால் ப்ளாஷை அனைத்து விட்டு களத்தில் இறங்குங்கள் ப்ரோக்ராம் மோடு போட்டுகொண்டால் போதுமானது. ஆனால் கேமரா அசையாமல் பார்த்துகொள்வது நல்லது.
வழக்கம் போல் இந்த படத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நமது பிட் (PIT PHOTOGRAPHY IN TAMIL) வாரம் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து பிரசுரிப்பார்கள் அதில் இந்த படமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
http://photography-in-tamil.blogspot.com/2010/06/blog-post.html

Monday 18 October 2010

பறவையை கண்டான் விமானம் படைத்தான்...........

பெங்களூரு கப்பன் பார்க்கில் ரவுண்டு ஹாலில் பல கண்ணாடி டாங்குகளில் அழகாக வண்ண மீன்களை விட்டு வைத்திருந்தார்கள். பல படங்களை வழக்கம் போல் எடுத்து வைத்திருந்தேன்.இருட்டறைகளில் சின்னதாய் விளக்கின் ஒளி இருந்தது நம்மை பிரமிக்க செய்தது. ரொம்ப லோ லைட் ஆனதால் iso கொஞ்சம் அதிகமாகவே போட வேண்டியதாகியது.
காம்பக்ட் காமெரா காரர்களுக்கு அண்டர் வாட்டர் எனப்படும் ஆப்சன் தரப்பட்டுள்ளது.
தண்ணீரில் உள்ளவைகளை  எடுப்பதற்கு அப்படி ஒரு வசதி.
மீனுக்கும் நமது தொழிலுக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆம். பெரிய புகைப்படகாரர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு சொல்வது தானே நமது கடமை?
றவையை கண்டான் விமானம் படைத்தான் மீனை கண்டான் கப்பலை படைத்தான்.
அதெல்லாம் அந்த காலத்து கதை. மீனை கண்டு வேறொன்றையும் கண்டுபிடித்து பல வருடங்கள் ஓடிவிட்டன. லென்ஸ் என்றாலே நமது கண்ணை மையமாக வைத்து தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். லென்சின் aperture முழுக்க  முழுக்க  நமது  கண்ணை மையமாக வைத்து தான் செயல்படுகிறது. கடற்கரைக்கு செல்லும் போது  கண்ணை கொஞ்சம் மூடித்தான் பார்ப்பார்கள். அப்படித்தான் காமெராவும் கடற்கரை வெளுச்சதில் aperture ஐ  நாம் சுருக்குவதில்லையா? இருட்டுக்குள் போகும் போது கண்ணை ரொம்ப திறந்து பார்பதில்லையா? அது போலதானே லோ லைட்டில் aperture திறக்கிறோம் ? இதெல்லாம் பேசிகளான   விஷயங்கள்.
மீனின் கண்ணும் அது போலதான். நாம் நேராக நின்று விட்டு இரண்டு கையையும் முழுதாய் விரித்து வைத்து விட்டு எத்தனை ஏரியா நமது கண்ணில் படுகிறதோ அத்தனை ஏரியா மீனின் கண்களுக்கும் தெரியும். அதாவது 180 டிகிரி. அதைக்கொண்டு தான் fish eye lens தயாரித்தார்கள். மிகப்பெரிய பில்டிங் முன்பு மிக அருகில்  போய் நின்று விட்டு fish eye lens போட்டால் அந்த பில்டிங் மட்டுமல்ல சுட்டுவட்டாரமே உள்ளே அடங்கிவிடும். ஆனால் எல்லாம் வளைந்து ரவுண்டு ball இல்    தெரியும் பிம்பம்  போல்
காணப்படும் .
பெரிய காமெராக்களுக்கு மட்டுமன்றி சிறிய காமெராக்களுக்கும் எக்ஸ்ட்ராவாக லென்சை  வாங்கி பயன்படுத்திகொள்ளலாம்.
க பிஷ் dank அருகில் ஒளிந்து நிர்ப்பவர்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தால் நீங்கள் தான் மாட்டிகொள்வீர்கள்

Thursday 14 October 2010

கூக்குரலுக்கொரு கூந்தன்குளம்


நெல்லைக்கு அருகில் உள்ள நாங்குநேரி வழியாக அரை மணி நேர பயணத்துக்கு பின் கூந்தன்குளம் என்ற பறவைகளின் சரணாலயம் ஓன்று உள்ளது. பறவைகளின் படம் பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.  

மிகவும்  சூடான இடம்.அதனால் தான் வெளிநாட்டு (ஜெர்மன் மற்றும் செய்பீரயா நாட்டு )பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்து முட்டை போட்டு குஞ்சு பொறித்து மீண்டும் அழைத்து செல்கிறது. அதற்கு அவ்வளவு ஹீட் தேவை. 

கூந்தன் குளம் - பறவைகளின் சரணாலயமாகவே இருக்கும் இங்கு நாம் நுழைந்தாலே பெரிய பாக்டரிக்குள் நுழைந்தது போல் பறவைகளின் சத்தம் கேட்கும். சின்னஞ்சிறிய இந்த கிராமத்தில் இந்த சப்தம் கேட்காமல் மக்கள் தூங்க மாட்டார்கள் போலும். ஏனென்றல் சீசன் நாட்களில் ஆயிரகணக்கான பறவைகள் இங்கு தஞ்சம் புகுந்து விடுகிறது.  வீடுகளில் உள்ள மரங்களையும் விட்டு வைக்காமல் எல்லா  கிளைகளிலும் முட்டை போட்டு காவல்காக்கிறது. 


மெல்லமாக நடந்து குளத்து பக்கம் போனால் அழகான ஒரு டவர் கட்டி வைத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளிலிருந்து பறவைகளை காண்பதற்கு இங்கே மாணவர்களை அழைத்து வருவதும் உண்டு . டவரின் மேலே நின்று குளம் முழுவதையும் பார்த்துக்கொள்ளலாம். பறவைகளின் அழகிய அணிவகுப்பும் மீன்களை கொத்திக்கொண்டு போகும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.கண்ணுக்கு  எட்டிய தூரம் வரை குளம் பறந்து விரிந்து இருப்பதால் இப்படி ஒரு டவரை கட்டி வைத்துள்ளனர். 
நானும் எனது நண்பருமாக பறவைகளின் நடவடிக்கைகளை படம் பிடிக்க துவங்கினோம். இங்கே எங்கு பார்த்தாலும் பறவைகளாய் இருந்ததால் படம் பிடிப்பதற்கு சிரமங்கள் ஒன்றும் இல்லை. ஆனாலும் நாங்கள் கொண்டு சென்ற சூம் லென்ஸ் 70-300௦ என்பதுவும் ஆட்டோ போகஸ்  இல்லாததாலும் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சாதாரண காம்பக்ட்  காமெராக்களை கொண்டு செல்பவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் பரவலாக எடுத்து கொள்ளலாம்.  DSLR  CAMERA மற்றும் 400  அல்லது 600 RANGE உள்ள சூம் லென்ஸ்
வைத்திருந்தால் இன்னும் நல்லது  அதில் உள்ள  CONTINUOUS சாட் எனப்படும் ஆப்சன்  போட்டுகொண்டால் பறவைகள் பறந்து வந்து  மீனை கொத்தும் காட்சியை சுலபமாக பிடித்துவிடலாம். BIRD வாட்சிங் எல்லாம் சாதரண விஷயம் இல்லை. காலை முதல் மாலை வரை காவல் கிடந்தால் தான் நல்ல படங்களை எடுக்க முடியும். பக்கத்திலுள்ள  கேரளாவிலிருந்து கூட புகைப்பட நண்பர்கள் பலரும் இங்கே வந்து படம் எடுப்பதுண்டு.
டிசம்பர் முதல் ஜூன் மாதங்கள் வரை பறவைகளை படம் பிடிக்கலாம். அதற்கு பிறகு குளத்தில் தண்ணீர் வற்றதுவங்கி விடுவதால் பறவைகள் நிறைய இடம் பெயர்ந்து விடுகிறது.
இந்த நாட்களில் நம்மால் குளத்தின் உட்பகுதிக்கு கூட செல்ல முடியும். ஆனால் நம்மை கண்டால் பறவைகள் பறந்துவிடத்துவங்கி விடுகிறது.
து போன்ற சூழ்நிலைகளில் பறவைகள் நம்மை கண்டால் ஓடாத வண்ணம் தரையில் முதளை போல் தவழ்ந்து கிடந்தது கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி படம் பிடித்து கொள்ள வேண்டியதுதான். பறவைகள் படம் பிடிபதற்கென்றே  உடைகளிலும் பச்சை போன்ற வர்ணங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக எங்கே பறவைகளை படம் படம்பிடிபதன்றாலும்  ஒவ்வொரு ஸ்டெப் வைத்து   தான் நகர வேண்டும். பறவை இருக்கிறதே என்றுஓடி போனீர்கள்   என்றால் அதுவும் ஓடியே போய்விடும்.

Tuesday 12 October 2010

எந்த பள்ளிக்கூடம் செல்ல ......

லையில் சில பெட்டிகளை கட்டிவைத்து விட்டு எந்த பள்ளிக்கூடம் செல்லலாம் என்று ஒவ்வொரு இடமாக பார்த்து விட்டு செல்லும்  இந்த சிறுவனைக்கண்டால் யாருக்கு தான் மனம் இறங்காது ? 
நானும் எனது பிலிம் காமெராவுடன் 1995 ஆண்டுகளில் சுற்றித்திரிந்தபோது பதிவானது இந்த படம். விஷுவல் படங்கள் அந்த நாட்களில் நிறைய எடுப்பது வழக்கம்.
ன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோக்ராபெர் சங்கத்தில் 2005 இல் புகைப்பட போட்டி ஓன்று நடத்தினார்கள். அதில் எனது  வேறு ஒரு படத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. கூடுதலாக இந்தபடத்திற்கு பார்வையாளர்களின் கூடுதல் ஒட்டு கிடைத்து மற்றொரு பரிசும் கிடைத்திருந்தது. 1997 இல் நவம்பர்  குங்குமம் இதழில் என்னைபற்றி ஒரு கட்டுரை பிரசுரம் செய்திருந்தார்கள் அதிலும் இந்த படம் வந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.
விஷுவல் படங்கள் எந்த காமேராவிலும் எடுத்து விடலாம். விஷுவல் படங்கள் எடுப்பதற்கு என்று தனி டெக்னிக் எதுவும் தேவை இல்லை. பிரதான கேமராக்களும் தேவை இல்லை.கொஞ்சம் நல்ல குவாலிட்டி படம் பதிவு செய்யும்  செல் போன் காமெராக்கள் கூட போதுமானது. செல் போன் கமேராக்களில் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு என்றே ஆன்லைனில் போட்டிகள் நிறைய வைக்கிறார்கள். 
இது போன்ற படங்கள் பதிவு செய்யும் பொழுது பொதுவான இடங்களாக  இருந்தால் நாம் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சுற்றுலாதலங்களுக்கு  சென்று இது போன்ற விஷுவல் படங்களை எடுக்கும் பொழுது உங்களை யாரும் கண்டுகொள்ளவதில்லை. படமும் நன்றாக அமையும். விஷுவல் படங்கள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதே இல்லை. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் லக்கை பொறுத்த விஷயம் அதனால் எப்பொழுது கிடைத்தாலும் சுட்டுக்கொள்ளுங்கள். பொதுவாக நம் ஊர் விஷுவல் படங்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால். படங்களை போட்டிகளுக்கு அனுப்பவும் மறந்து விடாதீர்கள். 
எனது மேலும் சில விஷுவல் படங்களை காண......
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1270531032
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1267868175 

நன்றி நண்பர்களே... 
இன்ட்லி, திரட்டி,தமிழ்வெளி, பகலவன் திரட்டி, உளவு, தமிழ் 10, facebookபோன்றவற்றில் வாக்களித்து வரும் அன்பர்களுக்கு மிக்க நன்றி. அதுவே நீங்கள் தரும் ஊக்கப்பரிசு.
இங்கும் அதுபோல் உங்கள் கருத்தக்களை கூறிசெல்ல கேட்டுகொள்கிறேன்.

Monday 11 October 2010

ஒளிரும் விளக்கு

ந்த ஒளிராத விளக்கு ஒளிர்ந்தது அன்று................ CFL பல்புகளுக்கு மாறி வரும் இந்த வேகமான உலகத்தில் எனக்கு இது போன்ற ஒரு படம் எடுக்க ஒளிராத பல்ப் எங்கு தேடியும் கிடைக்காமல் போனது.
ரு வழியாக ஒரு பல்ப் கிடைத்து விட எப்படியாவது உடைத்து (போட்டோ எடுத்து) விட வேண்டியது தான் என்று வேலையை துவங்கினேன். நண்பர் ஒருவருடன்
தயாரானேன். பல்பு போடுவதற்கு ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டுமென்பதால் அவருடன்  களத்தில் குதித்தேன்.
குடை விளக்குகளை ஒளிரசெய்து கீழே ஒரு இரும்பு ஸ்டாண்டை வைத்து விட்டு
பல்பை போடச்சொன்னேன் அவரும் போட்டுடைத்தார்.நானும் கிளிக் செய்து விட்டேன். எல்லாம் ஓகே. வழக்கம் போல் டேபிள் டாப் எடுக்க பயன்படுத்தப்படும் விளக்கமைப்பும். அதற்குரிய ஷட்டர் வேகங்களையும் கொண்டு எடுக்கப்பட்டது.இதில் டைமிங்கின் முக்கியத்துவம்  முன்னால் சொல்லபட்டவை போல்தான்.
தை டேபிள் டாப் லைட் வசதி இல்லாதவர்கள் கூட செய்து பார்க்கலாம்.
பின்னால் கருந்துணி ஒன்றை கட்டி நல்ல வெயில் நேரத்தில் அதாவது 12 முதல் 2 மணிக்கெல்லாம் (நல்ல வெயில் இருப்பதால் இது போன்ற நேரத்தை ஆக்சன் படங்கள்
பதிவு செய்ய பயன்படுத்தலாம்.)கீழே ஒரு இரும்புத்துண்டை வைத்து விட்டு பல்பை போட்டு உடைத்து உங்கள் பதிவை துவக்குங்கள். அதற்காக உபயோகத்தில் உள்ள பல்புகளை எடுத்து உடைத்து உங்கள் வீட்டில் வாங்கிக்கெட்டி கொள்ளாதீர்கள்
கை கால்களில் கண்ணாடித்தூள்கள் பட்டு விடாதவாறு  பார்த்துகொள்ளவும்.
காம்பக்ட் காமெராகாரர்கள் ஆக்சன் மோட் இதற்கு பயன்படுத்தலாம்.
மற்றவர்கள் (அதாவது DSLR நண்பர்கள்  ) ISO 400 800 வரை பயன்படுத்திக்கொள்ளலாம்
வெளிச்சத்திற்கு ஏற்றாற்போல் போட்டுகொள்ளவேண்டியதுதான் 

Friday 8 October 2010

செல்லமே .....

குழந்தைகளை கண்டால் யாருக்குதான் படம் பிடிக்காமல் இருக்கதோன்றும். குழந்தைகளை படம் பிடிக்கத்தானே காமெராவை பெரும்பாலும் நாம் வாங்கி வைத்திருக்கிறோம்?

குழந்தைகளை படம் பிடிக்க இங்க பாரும்மா காமேராலே ஒரு கிளி வருது பாரு பாருன்னு 
பொதுவா சொல்வது  வழக்கம். 

யல்பான படங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் நிறைய கிடைக்கும். குழந்தைகளை அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். அவர்களை சிறிது நேரம் கண்டு கொள்ளாதது போல் இருந்தால் அவர்கள் ஏதாவது விளையாடிகொண்டிருபார்கள் .அந்த நேரம் நாமும் நம் காமெராவை சுழற்றி சுழற்றி படமெடுத்துவிடவேண்டியதுதான்.

காம்பாக்ட் காமேராக்களில் இதெற்கென்றே கிட்ஸ் எனப்படும் ஆப்சன் இருக்கும். கிட்ஸ் ஆப்சன் ஓகே. அது என்ன வேலை செய்கிரதென்பதெல்லாம் நமக்கு  எங்கே தெரியும் கிட்ஸ் ஆப்சனை போடுவோம் படம் பிடிப்போம் அவ்வளவு தான். படம் வந்து விடும். சரிதான். கிட்ஸ் ஆப்சன் கொஞ்சம் வேகம் கூடிய ஷட்டரைகொண்டது . அதனால் அவர்களுடைய அசைவை துல்லியமாக கொஞ்சம் ஷேக் இல்லாமல் படம் பிடித்து விட முடியும்.

குழந்தைகள் கண்கள் பொதுவாக ரொம்ப கருப்பான முட்டை கரு போன்று தெளிவாக இருப்பதால் மானுவல்  காமெரா காரர்களுக்கு ஷார்ப் செய்வது மிகவும் வசதியான ஓன்று.
அதிலும் சூம் லென்ஸ் போட்டு குழந்தைகளை closs up  படம் பிடிப்பதே ஒரு அழகு தான்.இது போன்ற நேரங்களில் துல்லியமாக குழந்தைகளின் படங்களை எடுக்க சூம் லென்ஸ் வைத்திருப்பவர்கள் கண்ணைத்தான் போகஸ் செய்ய  வேண்டும்.னது சில குழந்தைகள் படங்கள் 
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1271032458

 

Tuesday 5 October 2010

பூக்களை பறிக்காதீர்


பூக்கள் என்றதுமே நினைவில் வருவது எங்கள் ஊரில் ஒரு ரோஸ் கார்டன் உள்ளது. அதன் உரிமையாளர் எத்தனை பேர் காமெரா கொண்டு சென்றாலும் கவலை படுவதே இல்லை. அது அவரது ஸ்டைல். இங்கே நமது புகைப்பட நண்பர்கள் திருமணமான ஜோடிகளை அழைத்து கொண்டு போய் படம் பிடிப்பது வழக்கம். நாமும் நம்முடைய பங்கிற்கு காமெரா சகிதமாக அங்கே அடிக்கடி போய் பூக்களை  படம் பிடிப்பதும் வழக்கம். 

பூக்கள் படம் பிடிப்பதற்கு என்று சில ஸ்டைல்கள் உள்ளது. ஆம். macro லென்ஸ்களை உபயோக படுத்தலாம், reflector (ஒரு தெர்மாகோல் அல்லது வெள்ளை பேப்பர் போதும் ) பயன் படுத்தலாம். இன்னும் ஸ்டாண்ட் கூட உபயோகித்து கொள்ளலாம். இங்கே நான் எடுத்த படங்கள் எல்லாம் (லிங்க் கீழே தரப்பட்டுள்ளது ) அப்படி reflector பயன் படுத்தி எடுக்கப்பட்டவை அல்ல. ஆனால் reflector பயன் படுத்தும் பொழுது லைட்டின்க்  ஈவனாக கிடைக்கும். மிதமான லைட்டின்க் உள்ள பொழுதை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக  அமையும். சூம் லென்சில் உள்ள macro உதவியுடன் இது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஷேக் ஆவது இயல்பு. அதனால் தான் ஸ்டாண்ட் உபயோகிப்பது நல்லது. 

ழக்கம் போல் சிறிய (காம்பக்ட்) கேமராகாரர்களுக்கு macro ஆப்சன் ஒரு இலை வடிவத்திலே கொடுக்கபட்டிருக்கும். அதை தேர்வு செய்து விட்டு படம் எடுத்தால் எத்தனை க்லோசாக சென்றாலும் ஷார்ப்பாக இருக்கும்.

ழை காலங்களில் பூக்களை படம் எடுப்பதே ஒரு சுகம். ஏனென்றால். மழைத்துளிகள் அழகாக அணிவகுதிருப்பதால் இன்னும் சிறப்பாக அமையும். ஆனாலும் நாமும் ஒரு பங்கிற்கு ஒரு வாட்டர் ஸ்ப்ரே பாட்டில் கொண்டு சென்று பூக்கள் மீது தண்ணீர் தெளித்து 
படம் எடுத்தால் பூக்களும் உற்சாகமாக இருக்கும். படமும் நன்றாக அமையும்.

து போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது  கஷ்டப்பட்டு ஆளாக்கிய பூக்களை பறிக்காதீர். 
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1281833713

Monday 4 October 2010

மின்னலை பிடிக்க ........

மாலைபொழுதில் மூன்று மணி நேரம் மின்னிய மின்னலை பார்த்ததும் பதிவு செய்திட ஆவலாய் இருந்தது. வேலையின் நெருக்கடியால் எங்கோ இருந்த நான் எனது கடையின் மொட்டை மாடிக்கு அவசர அவசரமாக கேமெரா மற்றும் stand சகிதமாக சென்றபோது மின்னல்கள் ஓய்ந்திருந்தது. இருந்தாலும் சில மணி நேரம் காவல்  கிடந்ததில்  ஆங்காங்கே லேசான மின்னல் நமக்கு அறுதல் தந்து கொண்டிருந்தது.படத்தில்   நாகர்கோவிலின் மத்தியில் உள்ள ஒரு ஹோட்டலின் கோபுரம்   அருகில் மின்னல் வந்தது போன்ற கட்சியை பதிவு செய்ய முடிந்தது.


மின்னல் என்றதும் ஓடிப்போய் ஆக்சன் மோடில் போட்டு படம் எடுத்து  விடலாம் என்றென்ன வேண்டாம்.மின்னல் எத்தனை  வேகமாக  வருகிறதோ அத்தனை பொறுமை நமக்கு தேவை.  நாலாபுறமும் மின்னல் ஒளிர்ந்து நம்மை கொஞ்சம் குழப்பிவிடும் அப்படிதான் எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருந்தது. ஒருபுறம் நான் காத்திருந்தபோது மின்னலோ நம்மை ஏமாற்றிவிட்டு வேறொரு புறமாக பிளாஷ் அடித்துகொண்டிருந்தது .
மின்னல் படம் பிடிக்க முக்கியமாக தேவை tripod அதாவது ஸ்டாண்ட். மின்னல் அடிப்பதோ ஒரு கனபொழுதுதான்.ஆனால் அது எங்கே அடிகிறதென்பதை சரியாக பார்த்து  வைத்துகொண்டு களத்தில் குதிக்க வேண்டும். 
மானுவல்  கேமராகாரர்கள் ஸ்லோ சட்டர்   உபயோகித்தல் நலம். காம்பக்ட் கேமரா காரர்கள் நைட் சாட் மோடை போட்டுகொண்டால் கொஞ்சம் படம் பதியும் நேரம் கிடைக்கும் என்பதால் பதிவும் செரியாக அமையும். காமெரா  அசையாது பார்த்துகொள்ளவும்.  தொடர்ச்சியாக வரும் மின்னலை ஸ்லோ ஷுட்டேரில் படம் எடுத்தால்  இன்னும் அழகான desighn போன்று  இருக்கும். continue snap கூட பயன்படுத்தலாம்.

னாலும் இது போன்ற நேரங்களில் நம்மையும் கொஞ்சம் கவனமாக  பார்த்து கொண்டால் நல்லது.
 

Saturday 2 October 2010

அடடா மழைடா அட மழைடா......


வானம் இருட்டுவதும் வெளுப்பதுவமாக நாடகமாடிக்கொண்டிருந்தது.
மழை வந்தாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். 
அதிலும் எங்கேயாவது பைப் வழியாக தண்ணீர் வந்தால் சொல்லவா வேண்டும். குற்றால அருவியிலே குளித்த கொண்டாட்டம் தான்.
நாமும் வழக்கம் போல் காமெரா  சகிதமாக மழையும் விட்டுவைக்காமல் களத்தில் குதித்தோம் சிறப்பாக பல படங்கள் குவிந்தது. 
ழைக்காலங்களில் படங்கள் எடுக்கும் பொழுது மிகவும் கவனம் தேவை.
தண்ணீர் கேமராவில் கண்டிப்பாக படக்கூடாது. இதற்காக காமெராவிற்கென ரெயின் கோட் நம்மூர் சென்னை போன்ற இடங்களில் 
photostoreகளில் கிடைக்கிறது. வாங்கி போர்த்திக்கொள்ளலாம் . மூடிய ரெயின் கோட்டை போட்டுகொண்டு  படம் எடுத்துகொள்ளலாம்.
குறிப்பாக கமெரா வாங்கும் பொழுதே சிலிக்கான் என்ற சிறிய  அளவில் 
உள்ள ஒரு பொதியை காமெரா பேகில் போட்டிருப்பார்கள். அதெல்லாம் 
எதற்கு என்று ஒதுக்கி விடாதீர்கள் . மழைக்காலங்களிலும் சரி 
கடல்கரையில் போட்டோ எடுத்தபின்பும் சரி காமெராவை நன்றாக 
துடைத்து விட்டு சிலிக்கான் பொதியை கட்டாயம் உள்ளே 
போட்டுக்கொள்ள வேண்டும். அதனால் லென்சிலும் காமெராவின் உட்பகுதிகளிலும்  பங்கஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

னது கூடுதல் மழை படங்களுக்கு ........

Friday 1 October 2010

"விளையாட்டு"

எந்தப்படத்தை தேர்வு செய்யலாம் என்றிருந்தபோது பிட்டில் இந்த மாதத்திற்க்கான போட்டியை அறிவித்திருந்தார்கள் ."விளையாட்டு" சந்தோஷமான தலைப்பு.  

ரண்டடி நீளத்தில் சூம் லென்சை கொண்டு ஸ்டேடியத்தில் வரிசையாக 
உட்கார்ந்து படம் பிடித்து கொண்டிருப்பதை டிவியில் பார்த்து இருப்போம். 
அது போல் எல்லாம் கனவு காணமல் நம் ஊர் குளத்தங்கரையில் சிறுவர்கள் 
ஜாலியாக குளித்துகொண்டிருப்பதை பார்த்தீர்கள் என்றால் உடனே தயாராகி விடுங்கள். சிறிய டிஜிட்டல் கேமரா வைத்திருப்பவர்கள் அதில் உள்ள ஆக்சன் மோடிற்கு மாற்றிவிட்டு தயாராகுங்கள்.சிறுவர்களை ஐஸ் வைத்து தம்பிகளா ஒருமுறை குதியுங்களேன்னு சொன்னால் போதும் ஒருமுறை அல்ல பலமுறை குதித்துவிட்டு  உங்களிடம் எங்கே காட்டுங்கள் பார்போம் என்பார்கள்.அவர்களிடம் மறக்காமல் படத்தை காட்டிவிடுங்கள். நீங்கள் எதற்காக படம் எடுக்குறீர்கள் என்பெல்லாம் அவர்களுக்கு பிரட்சனையே  இல்லை எப்படியாவது அவர்கள் குதித்ததை  ஒருமுறை பார்த்து விட்டால் போதும்.  சிறிய காமெராவில் வெகு தொலைவில் நின்று சூம் லென்ஸ் மூலம்  படம் எடுத்து க்ரையின்ஸ் வராமல் பார்த்துகொள்ளுங்கள். கொஞ்சம் பக்கத்திலே நின்று எடுத்தாலே போதுமானது .காமெராவில் தண்ணீர் பட்டு விடாமல் பார்த்துகொள்ளுங்கள். அதே போல்  காலையில் அல்லது மாலையில் நம் ஊர் பசங்க விளையாடும் மைதானங்களில் போனாலும் செரிதான். நிறைய படங்கள் கிடைக்கும்.
போட்டியில் பங்குபெறப்போகும்  பந்தய
தாரர்களுக்கு 
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
.

மேலே காணப்பட்ட இந்த படமும் அது போல் தான் 'மணக்குடி பனோரமா' எடுத்த பாலத்திர்கருகே  நின்று எடுத்த படம் . சிறுவர்களிடம் சொன்னபோது எந்த கேள்விக்கும் இடமில்லாது பலமுறை கடலில் துள்ளி குதித்து நம்மை குஷி ஆக்கினார்கள் .  இதிலும் டைமிங் மிக முக்கியம். படங்களை பதிவு செய்வதற்கு முன் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானம் கையாள்வது நலம். ஆக்சன் மோடில் இருந்தால். வேகமான அசைவுகளை துல்லியமாக எடுத்து விடலாம் . 

மானுவல்  கேமரா உபயோகிப்பவர்களுக்கு சொல்லி கொடுக்கவா வேண்டும்? (இருந்தாலும் தெரியதவர்களுக்காக... ISO 400அல்லது 800 போடலாம்   இதற்கே க்ரையின்ஸ் கொஞ்சம் ஆராம்பிக்கும்.   இதற்கு மேல் என்றால் கொஞ்சம் கூடத்தான் செய்யும்.   லைட் எப்படி உள்ளதோ  அதை பொறுத்த விஷயம். 

எனது சில ஆக்சன் படங்களை ஓர்குட்டில் காணலாம் ...

Tuesday 28 September 2010

உனக்கென்று ஒரு இருக்கை

ன்று  இரவே (27-9-2010)எனக்கு  தகவல் கிடைத்திருந்தது உங்களுக்கு 
முதல் பரிசு என்று......

சந்தோஷத்தில்  பிட் பகுதிக்குள் நுழைந்த போது இந்தமுறை வளர்ப்பு பிராணி என்ற தலைப்பிற்கு படம் அனுப்பியதற்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. வாழ்த்தியவர்களுக்கெல்லாம் நன்றியை சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  இருந்தாலும் இந்தபடத்தை எடுத்ததை பற்றி இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
ண்பரொருவர் வீட்டிற்கு வாங்கிச்சென்ற இந்த கிளி ஜோடியை அரை மணிநேரம் இரவல் வாங்கி எனது ஸ்டுடியோவிற்கு கொண்டுவந்தேன். டேபிள் டாப்பில் பொருட்களையும் போர்ட்ரைட் படங்களையும் எடுத்து கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. குடை விளக்குகளை ஒளிரசெய்து 
எனது நிகோன் 70-300 சூம்  லென்சை குப்புற வைத்துவிட்டு இரண்டு கிளிகளையும் ஒவ்வொன்றாக வைக்க முயன்றபோது இவர் மட்டும் அமர்ந்து தூங்கவே ஆரம்பித்துவிட்டார். ஒரு லென்சில் இரண்டு கிளியை வைப்பதென  உத்தேசம் விளக்குகளின் ஓளியின் பிரகாசம் கொஞ்சம் சோம்பலை தந்திருக்கலாம். மற்றவர்(ஆண் கிளி ) கொஞ்சம் நம்மிடம் கொஞ்சம் கோபத்துடன் காணப்பட்டார்.  போதாத குறைக்கு கொஞ்சம் கடித்தும் வைத்துவிட்டார்.  இருந்தாலும் நானும் விட்டபாடில்லை இத்தனை  போராட்டத்திலும் நம்மவர் (பெண் கிளி ) சீக்கிரம் படம் எடுங்க சார் என்று டென்ஷன்  வேறே......பல படங்கள் எடுத்து இருந்தேன். எல்லாம் நன்றாகவே வந்திருந்தது.  கிளியை தந்தவருக்கு நன்றியை  சொல்லி கொடுத்துவிட்டு புகைப்பட நண்பர் ஒருவரிடம் படங்களை போட்டு காட்டிய  
போது கொஞ்சம் கடிந்து கொண்டார். "லென்சில் நகம் பட்டால் என்ன ஆகும் தெரியுமா....." லென்சை உடனே பார்த்தேன் எதுவும் ஆகவில்லை. இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி பரிசு வாங்குவது......?அதற்காக ரிஸ்க் எடுப்பத்தற்காக தயாராகி விடாதீர்கள்.......... ரிஸ்க்  எடுப்பதை கவனமாக எடுங்கள்.  இன்று கடினமாக எடுக்கப்படும் எந்த படங்களும் நிச்சயமாக நாளைய வரலாறே! 
(இது இந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்பட்ட படம்.)
கழிந்த தகவல்களில் சொல்லி இருந்ததை போல் நீங்களும் மாதா மாதம் பிட் நடத்தும் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். பிட் இன் இணைப்பு இதோ.............

Sunday 26 September 2010

வர்ண ஜாலம்

மூவர் குழுவாக  இந்த  படத்தை  எடுப்பதற்கு  எனது சின்னஞ்சிறிய  ஸ்டுடியோவில்  தயாரானோம் .நாலு  வேறுபட்ட  நிறங்களில் கப்புகளை   கொண்டு  வந்து  அதன்  நிறங்களுக்கு மாற்று  கலர்களை  நிரப்பி லைட்டிங்   டெஸ்ட்  செய்து  விட்டு  தயாரானோம் .லைட்டிங்  டெஸ்ட்  என்பது அம்ப்ருல்லா  லைட் (குடை விளக்கு) என்பதால்  கண்டிப்பாக லைட்டிங்  டெஸ்ட் செய்து   விடுவது  நல்லது . ஏனென்றால்  ரிஸ்கான  படங்கள்  எடுக்கும்  பொது லைட்டிங்கால்   ஏதும் பிரச்சனை   படத்திற்கு  வந்துவிடகூடாதென்பதால்   கவனம்  தேவை. சரி   விஷயத்திற்கு  வருவோம். 
மூவரும்  தயார்.  மூன்று பேறும்  சிரிய  குப்பிகளுடன்  தயார். ஒருவர்  ஒரு  குப்பியும், மற்றொருவர்  இரண்டு குப்பியும்  அவரது  கையில்  வைத்துகொள்ள , நான்  ஒரு குப்பியை   ஒரு  கையில்  வைத்துகொண்டு இன்னொரு  கையை  கிளிக்கரில்  வைத்துகொண்டு தயாரானோம்  …..முதல்  முயற்சி  தோல்வி 
இரண்டாம்  மற்றும்  மூன்றம்  முயற்சி  தோல்வி  நான்காவது முயற்சியில்        வேற்றியானபோது பெரியே  சாதனை  ஒன்றை  நடத்திய  சந்தோசம்  எங்கள்  எல்லாவருக்கும் . இதில் டெக்னிகலான  ஒன்றும்  பெரிதாக  இல்லை  என்றாலும் டைமிங் மிக  முக்கியமனதாக  இருந்தது. நான்கு கப்புக்குள்ளும்  போடப்படும்  பொருள்  ஒரே  மாதிரியான  நேரத்தில்  விழவேண்டும் . அப்படியே  செரியாக  விழுந்தாலும்  கிளிக்   செய்யப்படும்   நேரமும்   சரியாக  இருக்க வேண்டும்  . இதில் லைட்டிங்  சரி   எக்ஸ்போசூர்களும் சரி  வழக்கம்  போலானதே .    

மென்மையான இதயம்


நம்  ஊர்  பொருட்காட்சிகளுக்கு   போனாலே  குழந்தைகள் வாங்கி  கேட்பது பப்ல்ஸ்  தான் அதை  விட  அவர்களுக்கு  வேறே சந்தோசம்  எதுவும்
கிடையாது . எங்கள்  வீட்டில் இப்படி  எனது மகன்   குமிழ்  ஊதிக்கொண்டு இருந்தபோது  எதேச்சயாக  கிடைத்தது  இந்த இதயம் போன்ற வடிவம். அதுவும்  இதய வடிவத்தில்  கிடைத்தது  என்னவோ  ஒரு  லக் தான். குமிழை   ஓட  ஓட  விரட்டி  எடுப்பது  ஆட்டோ போகஸ்  காமேராக்களில்  ஈசியாக இருந்தாலும்  என்னிடம் இருக்கும் சூம்  லென்ஸ்  எனது  d40x கமெராவில் மானுவல் லாகத்தான்   வொர்க்  ஆகும்  என்பதால் கொஞ்சம்  கடினமே .

குமிழ்  என்றதும்  யூ டுபிள் பார்த்த  ஒரு  காட்சியை  இங்கே  பகிர்ந்து  கொள்ளத்தான்  வேண்டும் .நம்மை விட  பெரிய  அளவில் குமிழை  ஊதி  அசத்திவிடுகிறார் ஒரு  வெளிநாட்டு  நண்பர். அதை  பார்த்ததும்  மலைத்தே  போய்   விட்டேன் .நீங்களும்  பார்த்து மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=eV6Wh-KX3bY&feature=player_embedded

Thursday 23 September 2010

இன்றைய இரவு உனக்கு கடலல்ல.....இந்த கோப்பைதான்!!!!


படத்தை பார்த்ததுமே கிறிஸ்தவ வடிவம் ஓன்று  நினைவில் வரலாம்.
ஆனால் இங்கே காண்பது அஸ்தமிக்கும் சூரியனும் அதற்கு முன்பாக வைக்கபட்டிருக்கும் ஒய்ன் கப்பும் தான்.  ஜூம் லென்ஸ் உதவியுடன் எடுத்த  
புகைப்படம். பொதுவாக சன் செட் ஆகிறதென்றால் அருகிலுள்ள முட்டம் (15KM) கடற்கரை இல்லை என்றால் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்வது வழக்கம். அன்று மொட்டை மாடிக்கு  சென்று இப்படி ஒரு டரியல் செய்து பார்க்கலாமே என்று தோணியது. பொதுவாக ஜூம் உபயோகபடுத்தும் பொழுது ஏதாவது  ஓன்று தான் நன்றாக போகஸ் ஆகும். சன் லேசாக போகஸ் பிடித்திருந்தாலும் நன்றாகவே வந்துள்ளது.

மே மாதம் என்பதால் பிட் தமிழில் ஒரு சூடான  கண்டெஸ்ட் வைத்தார்கள்  'அதிகாலையும் அந்தி மாலையும்' என்ற தலைப்பு.  நானும் வழக்கம்போல் எல்லாரையும் போல பந்தயத்தில் ஓடினேன். மூன்றாவதாக ஒரு இடம் கிடைத்தது கண்டு மகிழ்ந்தேன்.
(s-1/250, iso - 400, f/16)
இனி வரும் பந்தயங்களில் நீங்களும் பங்குபெறுங்கள்........

Wednesday 22 September 2010

நீர் குமிழ்

நீர் குமிழ்கள் என்றதுமே எனக்கு நினைவில் வருவது  photoboothguy என்ற பிலிக்கர் நண்பரைத்தான். இப்படியெல்லாம் போட்டோ எடுப்பார்களா ?ஆம். காரணம் அவர் எடுத்த படங்களை பார்த்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஸ்பீக்கர் இல் பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவைத்து விட்டு அதன் மேல் சில வாட்டர் கலரை ஊற்றி விட்டு ஸ்பீக்கர் ஐ தனது லப்டோபில் லிங்க் செய்துவிட்டு பவர் கூடிய சாப்ட்வேர் உதவியுடன் பாடலைசப்தமாக வைத்துகொள்வாராம். அந்த செப்தத்தின் அதிர்வில் மேலே எழும்பும் நீர்த்துளிகளை மக்ரோ லென்ஸ் மூலம் போட்டோ எடுத்துகொல்கிறார்.படங்களை பார்க்கும் போது நீர் துளிகள் டான்ஸ் ஆடியது  போல் இருக்கும் 

வர்ணங்கள்....


ஐந்து கப்பில் வாட்டர் கலருடன் தயாரானேன்.  
ஒரு கையிலே ஐந்து கப்பும் ஒருபுறம் ஸ்டாண்டில் பொருத்தப்பட்ட 
காமெராவும் தயார். அதற்கு முன் லைட் செட்டிங் எல்லாம் ஓகே 
செய்து விட்டு மேஜைக்கு மேல் ஒரு அடி உயரத்தில் கப்புகளை
போடுவதாக ஐடியா. சரி கப் உடைந்து விட்டால் ? 
பார்போம்.................................................................. 
ஒருகனபொழுதில் எல்லாம் முடிந்தும் விட்டது.
மரமேஜையில் விழுந்ததால் கப்புகள் ஒன்றும் உடையவில்லை .
காமேர்ரவில் வீவ் செய்து பார்த்தபோது அப்படி ஒரு ஆனந்தம்.
ஏனென்றல் ஒரே கிளிக்கில் டேக் ஓகே ஆனதால் 

Tuesday 21 September 2010

விடியலை நோக்கி

இரயிலுக்காக காத்திருந்து காத்திருந்து காத்து வாங்கின நேரத்திலே 
இந்த படம் எடுக்கப்படவில்லை .சென்னை  நோக்கி வேகமாய் சென்ற கே கே எக்ஸ்பிரஸ்லேருந்து படமாக்கப்பட்டது. சென்னைக்கு அருகாமையில் காலை நேரம் ஆனதால் ரயில்வே ஸ்டேஷன் கூட  காத்து வாங்கி கொண்டுதான் இருந்தது. 

மணக்குடி பனோரமா


குமரியில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது மணக்குடி என்னும் மீனவ கிராமம். சுனாமியில் பதம் பார்க்கப்பட்ட கிராமங்களில் இதுவும்  ஓன்று.
சுனாமியால் தூக்கிகொண்டு செல்லப்பட்ட பாலம் கொஞ்சம் தள்ளி கிடப்பதை பார்க்கலாம் .அவசரத்திற்காக போடப்பட்ட இந்த இரும்புபாலத்திலிருந்து பனோரமா படத்தை கிளிக் செய்தேன். பொதுவாக பனோரமா  இப்போதெல்லாம் ரொம்ப ஈசி. காரணம் காமேரக்களில் அதன்  வசதி  இருப்பதால். 94 களில் நெகடிவ் கேமரா கொண்டு இது போன்ற படம் எடுத்து மாக்சி படம் போட்டு அடுக்கி ஒட்டி  பார்த்த அனுபவம் மறந்துவிடாது.  இந்த  படத்தில் ஒரூ  விசேஷம் என்னவென்றல் 29 படங்களை வெர்டிகளாக எடுத்து joint செய்து  பார்த்தேன் . ஓகே ஆஹிடிச்சு. சாதரணமாக பனோரமா  படத்திற்கு(அதாவது ஒரு முளுசுற்றளவிற்கு)  11 அல்லது 12 படங்கள் போதுமானது.  

Monday 20 September 2010

மணல் தூவல்


ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும். 
கடற்கரையில் ஒரு தக்காளியை கண்டேன் அழகாய் இருந்தது .
அதை படம் பிடிபதற்குள் போதும் என்றாகி  விட்டது.
மணலில் படுத்துக்கொண்டு zoom 300லென்சை வைத்து manual focus செய்து 
முடிபதற்குள் மணல் காற்று கண்ணிலும் காமேரவிலும் கவ்விகொண்டது. ஆனாலும்  மணல் வாரி கொட்டுவது படத்தில் லேசாக தெரிந்ததால்
கொஞ்சம் சந்தோஷமே.