Pages

குறள்

Saturday 4 December, 2010

ஓடும் ரயிலில்....

ங்காவது வெளியூர் பயணமென்றால் கையில் காமெரா இல்லை என்றால் எதையோ இழந்ததை போலிருக்கும். அதுவும் நல்ல காட்சிகளை பார்த்துவிட்டால் அவ்ளோதான் மிஸ் பண்ணிட்டோமே என்றிருக்கும். அதனால் காமெரா இல்லாமல் வெளியூர் செல்வது குறைவுதான்.

அப்படிதான் பெங்களூர் சென்றபொழுது ரயிலின் கதவோரம் சாய்ந்து கொண்டு கொஞ்சம் ரிலாக்சாக   ரிஸ்க் எடுத்துக்கொண்ட படம் தான் இது. இதில் ரிஸ்க் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆர்வத்தின் காரணமாக கதவோரம் சாய்ந்து கொண்டிருப்பதால் ரயிலின் வேகத்தால் கதவு வேகமாக வந்து மூடிக்கொள்ளலாம். அதனால் ரயிலின் கதவோரம் நின்று இது போன்ற ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டாம்.

இந்தப்படம் ஸ்லோ ஷட்டருடன் எடுக்கப்பட்டதென்பது பார்த்தவுடனே தெரிந்த விஷயம் தான். இதமான வெளிச்சமிருந்தால் ஸ்லோ ஷட்டரை போட்டுகொள்ளலாம். அதிகமான சூரிய வெளிச்சம் உள்ள போது  aperture தேவையான  அளவு குறைத்து கொண்டு ஸ்லோ ஷட்டர் போட்டுகொள்ளலாம். 
இங்கே ISO 100 , SPEED 1/5, APR 1/14 பயன்படுத்திவுள்ளேன்.

இத்தனை வேகமான சூழலிலும் காமெரா ஸ்பீட் 5 போட்டு எடுத்த போதும் படம் ஷேக் ஆகாமல் வந்திருந்தது எனக்கே ஆச்சர்யம் தான்.

எல்லாம் செரி ஓடும் ரயிலில் தூங்கிவிட்டால் காமெராவும் ஓடிவிடும். கவனம் !