Pages

குறள்

Tuesday 5 October, 2010

பூக்களை பறிக்காதீர்


பூக்கள் என்றதுமே நினைவில் வருவது எங்கள் ஊரில் ஒரு ரோஸ் கார்டன் உள்ளது. அதன் உரிமையாளர் எத்தனை பேர் காமெரா கொண்டு சென்றாலும் கவலை படுவதே இல்லை. அது அவரது ஸ்டைல். இங்கே நமது புகைப்பட நண்பர்கள் திருமணமான ஜோடிகளை அழைத்து கொண்டு போய் படம் பிடிப்பது வழக்கம். நாமும் நம்முடைய பங்கிற்கு காமெரா சகிதமாக அங்கே அடிக்கடி போய் பூக்களை  படம் பிடிப்பதும் வழக்கம். 

பூக்கள் படம் பிடிப்பதற்கு என்று சில ஸ்டைல்கள் உள்ளது. ஆம். macro லென்ஸ்களை உபயோக படுத்தலாம், reflector (ஒரு தெர்மாகோல் அல்லது வெள்ளை பேப்பர் போதும் ) பயன் படுத்தலாம். இன்னும் ஸ்டாண்ட் கூட உபயோகித்து கொள்ளலாம். இங்கே நான் எடுத்த படங்கள் எல்லாம் (லிங்க் கீழே தரப்பட்டுள்ளது ) அப்படி reflector பயன் படுத்தி எடுக்கப்பட்டவை அல்ல. ஆனால் reflector பயன் படுத்தும் பொழுது லைட்டின்க்  ஈவனாக கிடைக்கும். மிதமான லைட்டின்க் உள்ள பொழுதை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக  அமையும். சூம் லென்சில் உள்ள macro உதவியுடன் இது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஷேக் ஆவது இயல்பு. அதனால் தான் ஸ்டாண்ட் உபயோகிப்பது நல்லது. 

ழக்கம் போல் சிறிய (காம்பக்ட்) கேமராகாரர்களுக்கு macro ஆப்சன் ஒரு இலை வடிவத்திலே கொடுக்கபட்டிருக்கும். அதை தேர்வு செய்து விட்டு படம் எடுத்தால் எத்தனை க்லோசாக சென்றாலும் ஷார்ப்பாக இருக்கும்.

ழை காலங்களில் பூக்களை படம் எடுப்பதே ஒரு சுகம். ஏனென்றால். மழைத்துளிகள் அழகாக அணிவகுதிருப்பதால் இன்னும் சிறப்பாக அமையும். ஆனாலும் நாமும் ஒரு பங்கிற்கு ஒரு வாட்டர் ஸ்ப்ரே பாட்டில் கொண்டு சென்று பூக்கள் மீது தண்ணீர் தெளித்து 
படம் எடுத்தால் பூக்களும் உற்சாகமாக இருக்கும். படமும் நன்றாக அமையும்.

து போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது  கஷ்டப்பட்டு ஆளாக்கிய பூக்களை பறிக்காதீர். 
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1281833713

3 comments:

த. ஜார்ஜ் said...

//தண்ணீர் தெளித்து
படம் எடுத்தால் பூக்களும் உற்சாகமாக இருக்கும். படமும் நன்றாக அமையும்.//

ரசிக்க முடிந்த வரிகள்.

உங்கள் சின்னச் சின்ன டிப்ஸ் புகைப்பட ஆர்வலர்களுக்கு உதவியானதாக இருக்கும்.

Unknown said...

nantri sir

Anonymous said...

பூவின் உள்ளத்தைக்கூட மிக நுணுக்கமாக அணுகும் வகையை நினைத்தால் வியப்பாக உள்ளது மெர்வின். நீரைத் தெளித்து அதன் அற்புதத்தை வெளிப்படுத்தும் நிலை என்பது எல்லோருக்கும் வராது என்றே நினைக்கிறேன்.

Post a Comment