Pages

குறள்

Thursday, 14 October, 2010

கூக்குரலுக்கொரு கூந்தன்குளம்


நெல்லைக்கு அருகில் உள்ள நாங்குநேரி வழியாக அரை மணி நேர பயணத்துக்கு பின் கூந்தன்குளம் என்ற பறவைகளின் சரணாலயம் ஓன்று உள்ளது. பறவைகளின் படம் பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.  

மிகவும்  சூடான இடம்.அதனால் தான் வெளிநாட்டு (ஜெர்மன் மற்றும் செய்பீரயா நாட்டு )பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்து முட்டை போட்டு குஞ்சு பொறித்து மீண்டும் அழைத்து செல்கிறது. அதற்கு அவ்வளவு ஹீட் தேவை. 

கூந்தன் குளம் - பறவைகளின் சரணாலயமாகவே இருக்கும் இங்கு நாம் நுழைந்தாலே பெரிய பாக்டரிக்குள் நுழைந்தது போல் பறவைகளின் சத்தம் கேட்கும். சின்னஞ்சிறிய இந்த கிராமத்தில் இந்த சப்தம் கேட்காமல் மக்கள் தூங்க மாட்டார்கள் போலும். ஏனென்றல் சீசன் நாட்களில் ஆயிரகணக்கான பறவைகள் இங்கு தஞ்சம் புகுந்து விடுகிறது.  வீடுகளில் உள்ள மரங்களையும் விட்டு வைக்காமல் எல்லா  கிளைகளிலும் முட்டை போட்டு காவல்காக்கிறது. 


மெல்லமாக நடந்து குளத்து பக்கம் போனால் அழகான ஒரு டவர் கட்டி வைத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளிலிருந்து பறவைகளை காண்பதற்கு இங்கே மாணவர்களை அழைத்து வருவதும் உண்டு . டவரின் மேலே நின்று குளம் முழுவதையும் பார்த்துக்கொள்ளலாம். பறவைகளின் அழகிய அணிவகுப்பும் மீன்களை கொத்திக்கொண்டு போகும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.கண்ணுக்கு  எட்டிய தூரம் வரை குளம் பறந்து விரிந்து இருப்பதால் இப்படி ஒரு டவரை கட்டி வைத்துள்ளனர். 
நானும் எனது நண்பருமாக பறவைகளின் நடவடிக்கைகளை படம் பிடிக்க துவங்கினோம். இங்கே எங்கு பார்த்தாலும் பறவைகளாய் இருந்ததால் படம் பிடிப்பதற்கு சிரமங்கள் ஒன்றும் இல்லை. ஆனாலும் நாங்கள் கொண்டு சென்ற சூம் லென்ஸ் 70-300௦ என்பதுவும் ஆட்டோ போகஸ்  இல்லாததாலும் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சாதாரண காம்பக்ட்  காமெராக்களை கொண்டு செல்பவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் பரவலாக எடுத்து கொள்ளலாம்.  DSLR  CAMERA மற்றும் 400  அல்லது 600 RANGE உள்ள சூம் லென்ஸ்
வைத்திருந்தால் இன்னும் நல்லது  அதில் உள்ள  CONTINUOUS சாட் எனப்படும் ஆப்சன்  போட்டுகொண்டால் பறவைகள் பறந்து வந்து  மீனை கொத்தும் காட்சியை சுலபமாக பிடித்துவிடலாம். BIRD வாட்சிங் எல்லாம் சாதரண விஷயம் இல்லை. காலை முதல் மாலை வரை காவல் கிடந்தால் தான் நல்ல படங்களை எடுக்க முடியும். பக்கத்திலுள்ள  கேரளாவிலிருந்து கூட புகைப்பட நண்பர்கள் பலரும் இங்கே வந்து படம் எடுப்பதுண்டு.
டிசம்பர் முதல் ஜூன் மாதங்கள் வரை பறவைகளை படம் பிடிக்கலாம். அதற்கு பிறகு குளத்தில் தண்ணீர் வற்றதுவங்கி விடுவதால் பறவைகள் நிறைய இடம் பெயர்ந்து விடுகிறது.
இந்த நாட்களில் நம்மால் குளத்தின் உட்பகுதிக்கு கூட செல்ல முடியும். ஆனால் நம்மை கண்டால் பறவைகள் பறந்துவிடத்துவங்கி விடுகிறது.
து போன்ற சூழ்நிலைகளில் பறவைகள் நம்மை கண்டால் ஓடாத வண்ணம் தரையில் முதளை போல் தவழ்ந்து கிடந்தது கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி படம் பிடித்து கொள்ள வேண்டியதுதான். பறவைகள் படம் பிடிபதற்கென்றே  உடைகளிலும் பச்சை போன்ற வர்ணங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக எங்கே பறவைகளை படம் படம்பிடிபதன்றாலும்  ஒவ்வொரு ஸ்டெப் வைத்து   தான் நகர வேண்டும். பறவை இருக்கிறதே என்றுஓடி போனீர்கள்   என்றால் அதுவும் ஓடியே போய்விடும்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

மிக சுவாரஸ்யமான விளக்கங்கள். நல்ல பதிவு மெர்வின். முன்னரே சொன்ன நினைவு. இங்கு நான் எடுத்த படங்கள் ஊரிலே கம்ப்யூட்டர் க்ராஷில் தொலைந்து போயின.

சொன்ன மாதிரி பறவைகள் வீட்டுப் பின்னாலிருக்கும் மரங்களில் எல்லாம் நூற்றுக்கணக்கில் அமர்ந்திருந்து பிரமிக்க வைத்தன. அந்த ஊர் மக்களுக்கு காக்கா குருவி போல சாதாரணம் அவை:)!

குளத்து டவர் மேலிருந்து நல்ல வியூ கிடைக்கும். அருமையான சூழல்.

படமெடுக்க கொடுத்திருக்கும் டிப்ஸ் நினைவில் கொள்கிறோம். நன்றி!

mervin anto said...

thanks madam. கண்டிப்பாக எல்லோரும் விசிட் செய்ய வேண்டிய இடம்.

வானம் said...

600,700mm ஸும் லென்ஸ் வாங்கனும்னா சொத்தையே எழுதி வைக்கனும் போலருக்கே.

mervin anto said...

இதற்கான புகைப்படகாரர்கள் வங்கி வைத்துள்ளனரே.
நம்மால் முடியாவிட்டாலும் 2x கன்வெர்ட்டர் வாங்கினால் 300 டபுள் ஆகி 600 ஆகதெரியும்

mervin anto said...

2x convertor chennai rate 9000(கம்பனியை பொறுத்த விஷயம்).

Margarita Yui said...

great scenes, and so vivid thanks

Ki.Ilampirai said...

கூந்தன் குளத்தின் கரையில் உள்ள பறவைகளையும் பிடிக்க இயலாது. கூடங்குளம் மக்களையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது என்பதே உண்மை.

Post a Comment