Pages

குறள்

Thursday 21 October, 2010

புதயலைதேடி...


மாவட்ட வாரியாக புகைப்பட சங்கங்களின் சார்பில் தமிழக கலாச்சாரம் என்ற தலைப்பில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் போட்டி நடத்தியிருந்தார்கள். வழக்கம் போல் எங்கள் மாவட்ட சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியிலும் நான் கலந்து கொண்டேன்.

இதற்காக போட்டோ எடுப்பதற்கென்று ஆலோசனையில் இருந்தபொழுது எங்கள் ஊரின் அருகாமையில் பானை செய்யும் இடத்தை தேர்வு செய்து அங்கு போவதற்கு அனுமதி கேட்பதற்காக நான் படித்த கல்லூரியின் இன்றைய தாளாளரின் வழியாக அனுமதி கேட்கலாம் என்று  அனுகியபோது அவர் எப்பொழுது படம் எடுக்க வருகிறீர்கள் என்று மட்டும் கேட்டு விட்டு 
அவரே நேராக கூட வந்து விட்டார். நான் கேட்டதோ அனுமதி மட்டும் தானே ....! அவரோ ஒரு பாதிரியாரும் கூட!
நிஜமாகாவே ஷாக் ஆகி அவரது நேரத்தை மிட்சபடுத்துவதர்காக வேகமாக களத்தில் குதித்தேன்.
உள்ளேயோ மிகவும் லோ லைட். வழக்கம் போல் ISO கூடுதலாய் போட்டு படம் எடுத்துவிட்டு நகர்ந்தேன். 
கிட்டத்தட்ட ஐந்து  படங்களை தேர்வுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன். 
இரெண்டாம் பரிசு என்று சேதி வந்ததும் ஒரு ஆனந்தம். ஆனால் பரிசு இதற்கல்ல வேறு ஒரு படத்திற்கு. 
ற்ற படங்கள் தேர்வு செய்யப்படாததின் காரணங்களை நடுவர் விளக்கிகொண்டிருந்தார்.
கிராப் செய்துதான் அனுப்பியிருந்தேன். அதில் பச்சையாக ஒரு பாலிதீன்  கவர் கவர் இருந்தது தான் காரணம். 
ப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களை மனதில் கொண்டு தேவைஇல்லாத வேஸ்ட் பொருட்கள் கிடந்தால் மாற்றி விட்டு படங்களை எடுத்து விட்டால் போட்டிகளுக்கு தயாராகிவிடலாம்.


2 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான படம். இயற்கை வெளிச்சம் மிக குறைவுதான்.

கற்ற பாடம்.. சரியாச் சொன்னீங்க:)! சின்ன பொருளும் சில நேரம் படத்தின் நேர்த்தியைப் பாழாக்கி விடுவதுண்டு. அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் பலமுறை.

போட்டிக்காகக் களமிறங்கி வித்தியாசமான படங்களைக் கொடுக்க முயலுகின்ற ஆர்வத்துக்கு ஒரு பெரிய ‘சபாஷ்’!

Unknown said...

சபாஷுக்கு நன்றி மேடம்

Post a Comment