Pages

குறள்

Monday 4 October, 2010

மின்னலை பிடிக்க ........

மாலைபொழுதில் மூன்று மணி நேரம் மின்னிய மின்னலை பார்த்ததும் பதிவு செய்திட ஆவலாய் இருந்தது. வேலையின் நெருக்கடியால் எங்கோ இருந்த நான் எனது கடையின் மொட்டை மாடிக்கு அவசர அவசரமாக கேமெரா மற்றும் stand சகிதமாக சென்றபோது மின்னல்கள் ஓய்ந்திருந்தது. இருந்தாலும் சில மணி நேரம் காவல்  கிடந்ததில்  ஆங்காங்கே லேசான மின்னல் நமக்கு அறுதல் தந்து கொண்டிருந்தது.படத்தில்   நாகர்கோவிலின் மத்தியில் உள்ள ஒரு ஹோட்டலின் கோபுரம்   அருகில் மின்னல் வந்தது போன்ற கட்சியை பதிவு செய்ய முடிந்தது.


மின்னல் என்றதும் ஓடிப்போய் ஆக்சன் மோடில் போட்டு படம் எடுத்து  விடலாம் என்றென்ன வேண்டாம்.மின்னல் எத்தனை  வேகமாக  வருகிறதோ அத்தனை பொறுமை நமக்கு தேவை.  நாலாபுறமும் மின்னல் ஒளிர்ந்து நம்மை கொஞ்சம் குழப்பிவிடும் அப்படிதான் எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருந்தது. ஒருபுறம் நான் காத்திருந்தபோது மின்னலோ நம்மை ஏமாற்றிவிட்டு வேறொரு புறமாக பிளாஷ் அடித்துகொண்டிருந்தது .
மின்னல் படம் பிடிக்க முக்கியமாக தேவை tripod அதாவது ஸ்டாண்ட். மின்னல் அடிப்பதோ ஒரு கனபொழுதுதான்.ஆனால் அது எங்கே அடிகிறதென்பதை சரியாக பார்த்து  வைத்துகொண்டு களத்தில் குதிக்க வேண்டும். 
மானுவல்  கேமராகாரர்கள் ஸ்லோ சட்டர்   உபயோகித்தல் நலம். காம்பக்ட் கேமரா காரர்கள் நைட் சாட் மோடை போட்டுகொண்டால் கொஞ்சம் படம் பதியும் நேரம் கிடைக்கும் என்பதால் பதிவும் செரியாக அமையும். காமெரா  அசையாது பார்த்துகொள்ளவும்.  தொடர்ச்சியாக வரும் மின்னலை ஸ்லோ ஷுட்டேரில் படம் எடுத்தால்  இன்னும் அழகான desighn போன்று  இருக்கும். continue snap கூட பயன்படுத்தலாம்.

னாலும் இது போன்ற நேரங்களில் நம்மையும் கொஞ்சம் கவனமாக  பார்த்து கொண்டால் நல்லது.
 

6 comments:

வானம் said...

//ஆனாலும் இது போன்ற நேரங்களில் நம்மையும் கொஞ்சம் கவனமாக பார்த்து கொண்டால் நல்லது.//
இதுதான் ரொம்ப முக்கியம்

ராமலக்ஷ்மி said...

மின்னலைப் பிடித்த விதம் சுவாரஸ்யம். பயனுள்ள குறிப்புகளுக்கும் நன்றி.

Unknown said...

நன்றி மேடம். எனது படம் பிடித்தலின் போது கிடைத்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் பல வரும் தவறாமல் பாருங்கள்.இது போன்ற சின்ன டிப்ஸ் உங்களைபோன்ற புகைபடத்தில் ஆர்வமுள்ள பலருக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

Unknown said...

நன்றி வானம் சார். நிச்சயமாக நாம் மழைக்காலங்களில் பேப்பரில் படிக்கத்தானே செய்கிறோம் ....அதனால் கண்டிப்பாக மின்னல் -கவனம்

த. ஜார்ஜ் said...

எனக்கென்னவோ அந்த கட்டிடத்திலிருந்து ஜிவ்வென்று ஒரு பறக்கும் தட்டு கிளம்ப்பிச் செல்வது போன்று... [அதுசரி.. பொழப்ப உட்டுபோட்டு.. இப்படிதான் வெறுமனே பொறுமை காக்கிறீங்களாக்கும்.]

Unknown said...

நன்றி ஜார்ஜ் சார். வரைவதற்கும் எழுதுவதற்கும் மட்டும் பொறுமை போதாது நல்ல படம் அமைவதற்கும் மிக பொறுமை தேவை.

Post a Comment