Pages

குறள்

Tuesday 28 September, 2010

உனக்கென்று ஒரு இருக்கை

ன்று  இரவே (27-9-2010)எனக்கு  தகவல் கிடைத்திருந்தது உங்களுக்கு 
முதல் பரிசு என்று......

சந்தோஷத்தில்  பிட் பகுதிக்குள் நுழைந்த போது இந்தமுறை வளர்ப்பு பிராணி என்ற தலைப்பிற்கு படம் அனுப்பியதற்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. வாழ்த்தியவர்களுக்கெல்லாம் நன்றியை சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  இருந்தாலும் இந்தபடத்தை எடுத்ததை பற்றி இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
ண்பரொருவர் வீட்டிற்கு வாங்கிச்சென்ற இந்த கிளி ஜோடியை அரை மணிநேரம் இரவல் வாங்கி எனது ஸ்டுடியோவிற்கு கொண்டுவந்தேன். டேபிள் டாப்பில் பொருட்களையும் போர்ட்ரைட் படங்களையும் எடுத்து கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. குடை விளக்குகளை ஒளிரசெய்து 
எனது நிகோன் 70-300 சூம்  லென்சை குப்புற வைத்துவிட்டு இரண்டு கிளிகளையும் ஒவ்வொன்றாக வைக்க முயன்றபோது இவர் மட்டும் அமர்ந்து தூங்கவே ஆரம்பித்துவிட்டார். ஒரு லென்சில் இரண்டு கிளியை வைப்பதென  உத்தேசம் விளக்குகளின் ஓளியின் பிரகாசம் கொஞ்சம் சோம்பலை தந்திருக்கலாம். மற்றவர்(ஆண் கிளி ) கொஞ்சம் நம்மிடம் கொஞ்சம் கோபத்துடன் காணப்பட்டார்.  போதாத குறைக்கு கொஞ்சம் கடித்தும் வைத்துவிட்டார்.  இருந்தாலும் நானும் விட்டபாடில்லை இத்தனை  போராட்டத்திலும் நம்மவர் (பெண் கிளி ) சீக்கிரம் படம் எடுங்க சார் என்று டென்ஷன்  வேறே......பல படங்கள் எடுத்து இருந்தேன். எல்லாம் நன்றாகவே வந்திருந்தது.  கிளியை தந்தவருக்கு நன்றியை  சொல்லி கொடுத்துவிட்டு புகைப்பட நண்பர் ஒருவரிடம் படங்களை போட்டு காட்டிய  
போது கொஞ்சம் கடிந்து கொண்டார். "லென்சில் நகம் பட்டால் என்ன ஆகும் தெரியுமா....." லென்சை உடனே பார்த்தேன் எதுவும் ஆகவில்லை. இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி பரிசு வாங்குவது......?அதற்காக ரிஸ்க் எடுப்பத்தற்காக தயாராகி விடாதீர்கள்.......... ரிஸ்க்  எடுப்பதை கவனமாக எடுங்கள்.  இன்று கடினமாக எடுக்கப்படும் எந்த படங்களும் நிச்சயமாக நாளைய வரலாறே! 
(இது இந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்பட்ட படம்.)
கழிந்த தகவல்களில் சொல்லி இருந்ததை போல் நீங்களும் மாதா மாதம் பிட் நடத்தும் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். பிட் இன் இணைப்பு இதோ.............

2 comments:

த. ஜார்ஜ் said...

நல்லயிருக்கு மெர்வின். தமிழில் உஙகள் முயற்சி வெகு சிறப்பு. நன்றாக எழுதுவதற்கும் வருகிறது உங்களுக்கு.வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி ஜார்ஜ் சார். எல்லாம் ஒரு சிறிய முயற்சி தான்.
எங்கே எழுதுவதால் போட்டோ எடுப்பதை மறந்துவிடுவேனோ(?)என்று எண்ணுகிறது.....
உங்களுக்கு நான் ஒரு கடுகு!

Post a Comment