Pages

குறள்

Friday 1 October, 2010

"விளையாட்டு"

எந்தப்படத்தை தேர்வு செய்யலாம் என்றிருந்தபோது பிட்டில் இந்த மாதத்திற்க்கான போட்டியை அறிவித்திருந்தார்கள் ."விளையாட்டு" சந்தோஷமான தலைப்பு.  

ரண்டடி நீளத்தில் சூம் லென்சை கொண்டு ஸ்டேடியத்தில் வரிசையாக 
உட்கார்ந்து படம் பிடித்து கொண்டிருப்பதை டிவியில் பார்த்து இருப்போம். 
அது போல் எல்லாம் கனவு காணமல் நம் ஊர் குளத்தங்கரையில் சிறுவர்கள் 
ஜாலியாக குளித்துகொண்டிருப்பதை பார்த்தீர்கள் என்றால் உடனே தயாராகி விடுங்கள். சிறிய டிஜிட்டல் கேமரா வைத்திருப்பவர்கள் அதில் உள்ள ஆக்சன் மோடிற்கு மாற்றிவிட்டு தயாராகுங்கள்.சிறுவர்களை ஐஸ் வைத்து தம்பிகளா ஒருமுறை குதியுங்களேன்னு சொன்னால் போதும் ஒருமுறை அல்ல பலமுறை குதித்துவிட்டு  உங்களிடம் எங்கே காட்டுங்கள் பார்போம் என்பார்கள்.அவர்களிடம் மறக்காமல் படத்தை காட்டிவிடுங்கள். நீங்கள் எதற்காக படம் எடுக்குறீர்கள் என்பெல்லாம் அவர்களுக்கு பிரட்சனையே  இல்லை எப்படியாவது அவர்கள் குதித்ததை  ஒருமுறை பார்த்து விட்டால் போதும்.  சிறிய காமெராவில் வெகு தொலைவில் நின்று சூம் லென்ஸ் மூலம்  படம் எடுத்து க்ரையின்ஸ் வராமல் பார்த்துகொள்ளுங்கள். கொஞ்சம் பக்கத்திலே நின்று எடுத்தாலே போதுமானது .காமெராவில் தண்ணீர் பட்டு விடாமல் பார்த்துகொள்ளுங்கள். அதே போல்  காலையில் அல்லது மாலையில் நம் ஊர் பசங்க விளையாடும் மைதானங்களில் போனாலும் செரிதான். நிறைய படங்கள் கிடைக்கும்.
போட்டியில் பங்குபெறப்போகும்  பந்தய
தாரர்களுக்கு 
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
.

மேலே காணப்பட்ட இந்த படமும் அது போல் தான் 'மணக்குடி பனோரமா' எடுத்த பாலத்திர்கருகே  நின்று எடுத்த படம் . சிறுவர்களிடம் சொன்னபோது எந்த கேள்விக்கும் இடமில்லாது பலமுறை கடலில் துள்ளி குதித்து நம்மை குஷி ஆக்கினார்கள் .  இதிலும் டைமிங் மிக முக்கியம். படங்களை பதிவு செய்வதற்கு முன் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானம் கையாள்வது நலம். ஆக்சன் மோடில் இருந்தால். வேகமான அசைவுகளை துல்லியமாக எடுத்து விடலாம் . 

மானுவல்  கேமரா உபயோகிப்பவர்களுக்கு சொல்லி கொடுக்கவா வேண்டும்? (இருந்தாலும் தெரியதவர்களுக்காக... ISO 400அல்லது 800 போடலாம்   இதற்கே க்ரையின்ஸ் கொஞ்சம் ஆராம்பிக்கும்.   இதற்கு மேல் என்றால் கொஞ்சம் கூடத்தான் செய்யும்.   லைட் எப்படி உள்ளதோ  அதை பொறுத்த விஷயம். 

எனது சில ஆக்சன் படங்களை ஓர்குட்டில் காணலாம் ...

2 comments:

ராமலக்ஷ்மி said...

சுவராஸ்யமான குறிப்புகள்:)!

சிறிய டிஜிட்டல் எனக் குறிப்பிடுவது P&S-தானே? ஆக்‌ஷன் மோடில் எல்லாம் ட்ரை செய்ததே இல்லை.

அட்டகாசமான படம். இந்த முறையும் வென்றிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

thanks madam, சிறிய டிஜிட்டல் எனக் குறிப்பிடுவது காம்பாக்ட் காமெராவை உதரணமாக nikon cool fix, canon power shot போன்றவை ..... மானுவல் காமெரா proffessionals உபயோகிப்பது செய்வது. எல்லாவற்றிலும் இந்த options கட்டாயம் இருக்கும்.

Post a Comment