Pages

குறள்

Tuesday 16 November, 2010

கவிதை எழுதிய கடலோரம்

பாசத்திற்குரிய நமது பாரதிராஜா ஓயாத அலைகளின் கடலோரத்தில் கவிதை எழுத வைத்து சின்னப்பதாசை பாஸ் செய்ய வைத்தது இந்த முட்டம் கடலோர கிராமத்தில்தான்.
மேடும் பள்ளமுமான சாலைகள், உயரமான பாறைகள், செம்மண் சூழ்ந்த நிலபரப்புகள்,
வரவேற்கும் லைட் ஹவுஸ், வளைந்து நெளிந்த கடற்கரை என்று அடுக்கிகொண்டே போகலாம்.
இன்று சுற்றுலா கைவசமுள்ள இந்த வியாபார ராவாரமில்லாத கடற்கரைக்கு வந்து செல்வோர் பலர். 
குமரிக்கு வரும் சினிமாகாரர்களுக்கு ஏற்ற இடம் மட்டுமல்ல. பல சினிமாக்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
அருகில் குன்று போல் குவிந்து கிடக்கும் செம்மண் பாறைகளும் காமெராகாரர்களுக்கு மிகவும் பரிட்சியபட்ட ஓன்று. இங்கு பல சினிமாக்களின் சண்டை காட்சிகள் மற்றும் நடனங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
எங்கள் ஊர் புகைப்படகாரர்கள் திருமண தம்பதியர்களை அழைத்து வந்து புகைப்படமெடுத்து திருமண ஆல்பங்களை அழகு படுத்துவார்கள்.
அபாயமான பாறைகளும் இங்கே உண்டு. சுனாமிக்கு பதம் பார்க்கப்பட்ட ஊர்களில் முக்கிய இடம் பிடித்த பெயரும் உண்டு.
சன்ரைஸ் சன்செட் காண்பதற்கும் மிக அருமையான இடம்.
இங்கே எடுக்கப்பட்ட இந்த பணரோமாவைதான் நாம் பார்க்கிறோம். பணரோமாவை பற்றி ஏற்கனேவே சொல்லப்பட்டுவிட்டது.


Monday 1 November, 2010

சேட்டையர்கள்

சேட்டையர்கள் என்றதும் மீண்டும் குழந்தைகளை பற்றி ஏதோ எழுதபோகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். 
காலை நேரங்களில் சிலருக்கு கோழி கூவினால் தான் தூக்கமே  கலையும். எங்கள் வீட்டை சுற்றி கோழிகளை விட அணில் கூட்டங்கள் தான் அதிகம். அவர்களின் கீச்சு குரலில் நம்மை எழுப்பிவிடுவார்கள். 
காலை நேரங்களில் உணவுக்காக ஓடியாடி வேலைபார்ப்பதையும் அப்பப்போ தங்களது சேட்டைகளையும் செய்து நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள். சிலருக்கு மீன் வளர்த்து அதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் கவலைகள் எல்லாம் ஓடோடிவிடும். அதுபோலதான் இவர்களின் சேட்டைகளையும் பார்த்துகொண்டிருந்தால் ஒரு சுகம்.
அதிகாலையில் எழுந்து இவர்கள் நடவடிக்கைகளை படம் பிடிப்பது வழக்கம்.
காலை நேரமாவதால் வெளிச்சங்கள் குறைவாகவே இருக்கும். சூம் லென்சை மாட்டி விட்டு அதன் வேகமான துள்ளல்களை படம் பிடிக்கும் போது ஷேக் ஆகிவிடுவதுண்டு. ISO அதிகமுள்ள கேமராக்களுக்கு  இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இங்கே காணப்பட்டிருக்கும் படங்களை நான் எடுத்த விதமே வேறு! 
பொதுவாக இப்பொழுது காமேராக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு முக்கிய தீப்பெட்டி போன்ற ரிமோட் எனப்படும் கருவிதான் ஒரு பிளஸ் பாயிண்ட் . சில காமேராக்களுக்கு ஒயருடன் கூடிய ரிமோட் கிடைக்கும். சில காமேராக்களுக்கு கார்ட் லெஸ் ரிமோட் கிடைக்கும்.
இந்த ரிமோட்டுகளை பொதுவாக காமெரா அசையாமல்  ஸ்லோ ஷட்டர் பயன்படுத்தும் இடங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதாவது இரவு விளக்குகள், ரோடு விளக்குகள், மூன் லைட் போன்றவற்றை படம் பிடிக்க பயன்படுத்துவது வழக்கம். 
நாம்  அணில்களை படம் பிடிப்பதற்காக காலை நேரத்தில் சூம் லென்சை மாற்றிவிட்டு ஸ்டாண்டில் காமெராவை இணைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்துவிட்டு சிலமணி நேரம் காவல் இருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக நான் வைத்திருந்த ஆகாரத்தை  மோப்பம் பிடித்துகொண்டு வரத்துவங்கினர். நம்மை பார்த்தால்  ஓடிவிடுவார்கள் அதுமட்டுமல்ல காமெராவின் கிளிக் சப்தம் கேட்டாலும் போதும் பறந்தே விடுவார்கள். அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நாம் சூம் லென்சில் எடுத்துவிடலாம் ஆனால் அதை விட நெருக்கமாக நமது கேமராவை கொண்டு செல்வது என்றால் இவர்களுக்கு  நம்மை கண்டால் பயம். இங்கே எனது சூம் லென்சின்  ஆட்டோ போகஸ் இயங்காது. முழுக்க முழுக்க மானுவல்   போகஸ் தான். ரிமோட் பயன்படுத்தும் பொழுது அணில் கொஞ்சம் அங்கே இங்கே என்று இடம் மாறினாலும் ஏமாற்றம் தான் மிச்சம்.
இந்த REMOTE சென்னையில் கிடைக்கிறது. நிக்கான் மற்றும் கானன் காமேராக்களுக்கும் கிடைக்கிறது. சில கேமராக்களுக்கு ஏற்ப மாறுபடுவதால் உங்கள் காமெராவின் மாடல் நம்பரை கூறி வாங்கிகொள்ளலாம்.
காமேராவிலும் ரிமொடிற்கு  என்று ஒரு ஆப்சன் இருப்பதால் அதை போட்டுகொண்டால் தான் ரிமோட் வேலை செய்யும். 
எனது ஆர்குட் பகுதியில் 250 அணில் படங்கள் இணைத்துள்ளேன். ஆனால் அதில் ரிமோட்  பயன் படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை விட ரிமோட் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் அதிகம் இருக்கும்.