Pages

குறள்

Thursday 21 October, 2010

மழைக்குள் குடை

குடை மிளகாய் படம் எடுப்பதற்காகவே பலவர்ணங்களில் வாங்கி வந்திருந்தேன். 
மூன்று குடை மிளகாயையும் கருப்பு பாலிஷ் பேப்பரில் வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து(SPRAY BOTTLE உதவியுடன் ) டாப் ஆங்கிளில் ஊடுருவல் வெளிச்சம் கொண்டு எடுக்கப்பட்ட படம். 
ன்னல் வழியாக அல்லது கதவுகள் வழியாக வரும் வெளிச்சத்து ஒளிகளுக்கு நிகர் எதுவும் இல்லை. படத்திற்கு தேவையான ஒருபுற ஒளியும் மறுபுறம் தேவையான நிழலும் தந்து படங்களை மெருகூட்டிவிடுகிறது. 
பாலுமகேந்திரா படங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். அப்படி ஒரு ஒரிஜினாலிட்டி அவரது  படங்களில்.பொருட்களை மட்டுமன்றி மனிதர்களையும் இப்படிப்பட்ட வெளிச்சத்தில் படம் எடுப்பது தனி அழகு தான். 
இது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஸ்டாண்ட் உபயோகம்  செய்து ISO மிகவும் குறைத்து போட்டு ஸ்லோ ஷட்டர் போட்டு எடுத்தால் படம் மிகவும் சிறப்பாய் வரும்.
தேவைபட்டால் ஒரு வெள்ளை காகிதத்தை நிழல் வரும் இடங்களில் பிடித்துக்கொண்டால் கொஞ்சம் ஷேடையும் குறைத்துகொள்ளலாம்.
காம்பாக்ட் கேமரா நண்பர்கள் இது போல் படம் பிடிக்க ஆசைபட்டால் ப்ளாஷை அனைத்து விட்டு களத்தில் இறங்குங்கள் ப்ரோக்ராம் மோடு போட்டுகொண்டால் போதுமானது. ஆனால் கேமரா அசையாமல் பார்த்துகொள்வது நல்லது.
வழக்கம் போல் இந்த படத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நமது பிட் (PIT PHOTOGRAPHY IN TAMIL) வாரம் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து பிரசுரிப்பார்கள் அதில் இந்த படமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
http://photography-in-tamil.blogspot.com/2010/06/blog-post.html

2 comments:

ராமலக்ஷ்மி said...

// இந்த படத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால்//

ஆகா தெரியுமே:)! மறுபடி வாழ்த்துக்கள்!

படத்தின் பின்னணியில் இத்தனை கவனிக்க வேண்டியிருக்கிறதா:)? அதெல்லாம் கவனிக்காம இதுபோல நான் எடுத்த ஒன்று ஃப்ளிக்கரில் பார்த்திருப்பீர்களே:))? இனி இண்டோர் படங்களில் இக்குறிப்புகளைக் கவனத்தில் கொள்கிறேன். நன்றி மெர்வின்.

Unknown said...

நன்றி மேடம். பார்த்தேன் அதுவும் அழகாகத்தான் உள்ளது. நிச்சயமாக ஒவ்வொரு படமும் கவனித்து எடுத்தால் பின்னர் யோசிக்கவேண்டாமே. எதாவது ஒரு விஷயத்தை கோட்டை விட்டு விட்டாலும் சில நேரம் பரிசுகளுக்கு அருகில் வந்து விட்டு நகர்ந்து விடும். நாளை ஒரு மெசேஜ் தருகிறேன் நிச்சயம் பாருங்கள். அதில் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டதை எழுதியிருப்பேன்.

Post a Comment