Pages

குறள்

Tuesday 12 October, 2010

எந்த பள்ளிக்கூடம் செல்ல ......

லையில் சில பெட்டிகளை கட்டிவைத்து விட்டு எந்த பள்ளிக்கூடம் செல்லலாம் என்று ஒவ்வொரு இடமாக பார்த்து விட்டு செல்லும்  இந்த சிறுவனைக்கண்டால் யாருக்கு தான் மனம் இறங்காது ? 
நானும் எனது பிலிம் காமெராவுடன் 1995 ஆண்டுகளில் சுற்றித்திரிந்தபோது பதிவானது இந்த படம். விஷுவல் படங்கள் அந்த நாட்களில் நிறைய எடுப்பது வழக்கம்.
ன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோக்ராபெர் சங்கத்தில் 2005 இல் புகைப்பட போட்டி ஓன்று நடத்தினார்கள். அதில் எனது  வேறு ஒரு படத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. கூடுதலாக இந்தபடத்திற்கு பார்வையாளர்களின் கூடுதல் ஒட்டு கிடைத்து மற்றொரு பரிசும் கிடைத்திருந்தது. 1997 இல் நவம்பர்  குங்குமம் இதழில் என்னைபற்றி ஒரு கட்டுரை பிரசுரம் செய்திருந்தார்கள் அதிலும் இந்த படம் வந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.
விஷுவல் படங்கள் எந்த காமேராவிலும் எடுத்து விடலாம். விஷுவல் படங்கள் எடுப்பதற்கு என்று தனி டெக்னிக் எதுவும் தேவை இல்லை. பிரதான கேமராக்களும் தேவை இல்லை.கொஞ்சம் நல்ல குவாலிட்டி படம் பதிவு செய்யும்  செல் போன் காமெராக்கள் கூட போதுமானது. செல் போன் கமேராக்களில் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு என்றே ஆன்லைனில் போட்டிகள் நிறைய வைக்கிறார்கள். 
இது போன்ற படங்கள் பதிவு செய்யும் பொழுது பொதுவான இடங்களாக  இருந்தால் நாம் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சுற்றுலாதலங்களுக்கு  சென்று இது போன்ற விஷுவல் படங்களை எடுக்கும் பொழுது உங்களை யாரும் கண்டுகொள்ளவதில்லை. படமும் நன்றாக அமையும். விஷுவல் படங்கள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதே இல்லை. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் லக்கை பொறுத்த விஷயம் அதனால் எப்பொழுது கிடைத்தாலும் சுட்டுக்கொள்ளுங்கள். பொதுவாக நம் ஊர் விஷுவல் படங்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால். படங்களை போட்டிகளுக்கு அனுப்பவும் மறந்து விடாதீர்கள். 
எனது மேலும் சில விஷுவல் படங்களை காண......
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1270531032
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1267868175 

நன்றி நண்பர்களே... 
இன்ட்லி, திரட்டி,தமிழ்வெளி, பகலவன் திரட்டி, உளவு, தமிழ் 10, facebookபோன்றவற்றில் வாக்களித்து வரும் அன்பர்களுக்கு மிக்க நன்றி. அதுவே நீங்கள் தரும் ஊக்கப்பரிசு.
இங்கும் அதுபோல் உங்கள் கருத்தக்களை கூறிசெல்ல கேட்டுகொள்கிறேன்.

7 comments:

Unknown said...

மன்னிக்கவும் தமிழ் மனம் நண்பர்களுக்கும் நன்றி .......

ராமலக்ஷ்மி said...

அருமையான படம்.

//கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோக்ராபெர் சங்கத்தில் 2005 இல் புகைப்பட போட்டி ஓன்று நடத்தினார்கள். அதில் எனது வேறு ஒரு படத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. கூடுதலாக இந்தபடத்திற்கு பார்வையாளர்களின் கூடுதல் ஒட்டு கிடைத்து மற்றொரு பரிசும் கிடைத்திருந்தது. 1997 இல் நவம்பர் குங்குமம் இதழில் என்னைபற்றி ஒரு கட்டுரை பிரசுரம் செய்திருந்தார்கள் அதிலும் இந்த படம் வந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.//

வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி மேடம்

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் . நல்ல சிந்தனை எழுத்துக்களில்

Unknown said...

நன்றி சங்கர் சார்
அடிக்கடி வாருங்கள் ஆலோசனை கூறுங்கள்

த. ஜார்ஜ் said...

படம் நல்லாயிருக்கு.எழுத்தும் சுவாரசியமாயிருக்கு.கலக்குங்க

Unknown said...

நன்றி geo சார்

Post a Comment