Pages

குறள்

Tuesday 26 October 2010

"வட்டமான கோட்டை"

திருநெல்வேலியிலிருந்து காவல் கிணறு வழியாக கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது வட்டகோட்டை. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இங்கேயும் ஒரு விசிட் அடிக்கலாம். உள்ளே நுழைந்ததும் பச்சை பசேலென அழகான புல் தரையை அமைத்துள்ளனர். இன்று வரையிலும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்கள்.அதன் மத்தியில் காணப்படும் படிக்கட்டு வழியாக மேலே சென்றால் கடலை பார்க்கலாம்.  கோட்டையின் கீழ் பகுதி கடலில்   புதைத்து வைக்கப்பட்டதைபோல் அழகாக இருக்கும். இருபுறங்களிலும் மிதமான அலைகள். ஒருபுறம் சுற்றிலும் மலைகள் மற்றும் காற்றாடி விசிறிகளின் தோற்றம் கண்ணை கவரும். கருப்பு நிற மணலும், உப்பளங்களும் சுற்றி உள்ளன.
கோட்டையின் முகப்பு பகுதியை பனரோமா  எடுத்துக்கொண்டேன்.
ஒரு முழு சுற்றளவு  பனரோமா  இது. நீளவாக்கில் உள்ள இந்த படத்தை பெரிதாக போட்டு வட்டமாக சுற்றி  வைத்து விட்டு உள்ளே நின்று பார்த்தால் அந்த கோட்டையினுள் நிற்பது போன்ற உணர்வு இருக்கும். 
ஏற்கவே பனரோமாவை பற்றி சொல்லி இருந்தாலும். இன்னும் சில டிப்ஸ் இங்கே தர விரும்புகின்றேன். 
பொதுவாக காம்பக்ட் காமராக்களில்  பனரோமா  ஆப்சன்  வரத்துவங்கி விட்டதால் அது இப்பொழுது ஈசியாகிவிட்டது பனரோமா  மோடைபோட்டு விட்டு இது போன்ற நல்ல காட்சிகள்  உள்ள இடத்தை தேர்வு செய்து உங்கள் படபிடிப்பை துவக்குங்கள்.
முதல் கிளிக் செய்ததுமே  கமெராவில் காண்பிக்கும் இரண்டுகட்டங்களில் ஒன்றில் முதலாவதாக எடுத்த படம் அப்படியே நிற்கும். இரண்டாவது எடுக்கபோகும் லொக்கேஷனை  அதற்கு நேராக கொண்டு நிறுத்தி பார்த்தால்   எங்கே மேட்ச் ஆகுதோ அதன் பின்னர்  கிளிக் செய்து கொள்ளலாம்.  இப்படியே முழு சுற்றையும் படம் பிடித்து கொள்ள வேண்டியது தான். இங்கே ஸ்டாண்ட் உபயோகிப்பது மிக அவசியம்.
மேலே உள்ள படமும் சரி  நான் எடுத்த பல படங்களிலும் ஸ்டாண்ட் உபயோக படுத்தப்படவில்லை தான். எனினும் புதிதாய் முயற்சி செய்பவர்கள் ஸ்டாண்ட் பயன் படுத்துவது நல்லது.காலை  நேரமோ அல்லது மாலை நேரமோ இது போன்ற படங்கள் எடுக்கும் பொழுது சிறிது வேகமாக ஒவ்வொரு பிரேமும்  கடந்திருக்க வேண்டும். இல்லை என்றால்  லைடிங்கில்  வேறுபாடுகள் படத்தில் தெரியலாம்
இவற்றை படமெடுத்தால் மட்டும்  போதாது. ஸ்டிச்சிங் செய்யப்படவேண்டும் போட்டோஷாப்  தெரிந்தவர்களுக்கு நோ ப்ரோப்ளம்  ஈசியாக ஸ்டிச்ச் செய்து விடலாம்.  மற்றவரகள் இதெற்கென சாப்ட்வேர்கள் ஆன்லைனில் தேடிக்கொள்ளலாம்.
எனது மேலும் சில பனரோமா படங்களுக்கு ....
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1269421348    

7 comments:

கக்கு - மாணிக்கம் said...

நீங்கள் எடுத்துள்ள படம் மிக அருமை. அழகும் பிரமிப்பும் கொண்டுள்ளது. இதுபோன்ற இடங்கள் அங்குள்ளது அறிந்து மகிழ்ச்சி. சென்றுவர ஆவல். பனோரமா பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
அடுத்தமுறை இந்த வசதியுள்ள கேமரா வாங்க ஆசை.

mervin anto said...

நன்றி மாணிக்கம் சார். இன்னும் இது போன்ற பல இடங்கள் இங்கு உள்ளன.
விரைவில் காமெரா வாங்கி கலக்குங்கள்

வானம் said...

பனோரமா எடுக்க விரும்பினால் கேமராவை ஆட்டோ மோடில் வைக்காமல் manual mode-ல் வைக்கவேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

mervin anto said...

இதை குறிபிட்டதர்க்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

பனோரமா பற்றிய குறிப்புகளுக்கு நன்றி மெர்வின்.

வட்டக் கோட்டையைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே இத்தனை காலம். அருமையான இடமாக உள்ளது. செல்லும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

மற்ற பனோரமா படங்களும் பார்த்தேன் அருமை. அந்த சுட்டிக்கு லிங்கையும் இணைத்திட்டால் வருபவருக்கு சுலபமாய் இருக்குமே.

mervin anto said...

நன்றி மேடம். வட்டகோட்டையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கேhttp://www.google.com/search?q=vattakottai&rls=com.microsoft:en-US&ie=UTF-8&oe=UTF-8&startIndex=&startPage=0 பல இணைப்புகள் உள்ளது.
எனது ஆர்குட்டின் பனோரம லிங்கையும்http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1269421348 இங்கே இணைத்து கொள்கிறேன் ( ஏற்கெனவே இணைத்துள்ளேன் )

mervin anto said...

லிங்கை டூல் பாரில் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளவும்

Post a Comment