Pages

குறள்

Monday 18 October, 2010

பறவையை கண்டான் விமானம் படைத்தான்...........

பெங்களூரு கப்பன் பார்க்கில் ரவுண்டு ஹாலில் பல கண்ணாடி டாங்குகளில் அழகாக வண்ண மீன்களை விட்டு வைத்திருந்தார்கள். பல படங்களை வழக்கம் போல் எடுத்து வைத்திருந்தேன்.இருட்டறைகளில் சின்னதாய் விளக்கின் ஒளி இருந்தது நம்மை பிரமிக்க செய்தது. ரொம்ப லோ லைட் ஆனதால் iso கொஞ்சம் அதிகமாகவே போட வேண்டியதாகியது.
காம்பக்ட் காமெரா காரர்களுக்கு அண்டர் வாட்டர் எனப்படும் ஆப்சன் தரப்பட்டுள்ளது.
தண்ணீரில் உள்ளவைகளை  எடுப்பதற்கு அப்படி ஒரு வசதி.
மீனுக்கும் நமது தொழிலுக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆம். பெரிய புகைப்படகாரர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு சொல்வது தானே நமது கடமை?
றவையை கண்டான் விமானம் படைத்தான் மீனை கண்டான் கப்பலை படைத்தான்.
அதெல்லாம் அந்த காலத்து கதை. மீனை கண்டு வேறொன்றையும் கண்டுபிடித்து பல வருடங்கள் ஓடிவிட்டன. லென்ஸ் என்றாலே நமது கண்ணை மையமாக வைத்து தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். லென்சின் aperture முழுக்க  முழுக்க  நமது  கண்ணை மையமாக வைத்து தான் செயல்படுகிறது. கடற்கரைக்கு செல்லும் போது  கண்ணை கொஞ்சம் மூடித்தான் பார்ப்பார்கள். அப்படித்தான் காமெராவும் கடற்கரை வெளுச்சதில் aperture ஐ  நாம் சுருக்குவதில்லையா? இருட்டுக்குள் போகும் போது கண்ணை ரொம்ப திறந்து பார்பதில்லையா? அது போலதானே லோ லைட்டில் aperture திறக்கிறோம் ? இதெல்லாம் பேசிகளான   விஷயங்கள்.
மீனின் கண்ணும் அது போலதான். நாம் நேராக நின்று விட்டு இரண்டு கையையும் முழுதாய் விரித்து வைத்து விட்டு எத்தனை ஏரியா நமது கண்ணில் படுகிறதோ அத்தனை ஏரியா மீனின் கண்களுக்கும் தெரியும். அதாவது 180 டிகிரி. அதைக்கொண்டு தான் fish eye lens தயாரித்தார்கள். மிகப்பெரிய பில்டிங் முன்பு மிக அருகில்  போய் நின்று விட்டு fish eye lens போட்டால் அந்த பில்டிங் மட்டுமல்ல சுட்டுவட்டாரமே உள்ளே அடங்கிவிடும். ஆனால் எல்லாம் வளைந்து ரவுண்டு ball இல்    தெரியும் பிம்பம்  போல்
காணப்படும் .
பெரிய காமெராக்களுக்கு மட்டுமன்றி சிறிய காமெராக்களுக்கும் எக்ஸ்ட்ராவாக லென்சை  வாங்கி பயன்படுத்திகொள்ளலாம்.
க பிஷ் dank அருகில் ஒளிந்து நிர்ப்பவர்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தால் நீங்கள் தான் மாட்டிகொள்வீர்கள்

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான படம்.

வெகு அழகான விளக்கம். ரசித்தேன்.

நல்ல தகவல்களுக்கு நன்றி மெர்வின்.

Unknown said...

நன்றி மேடம்

சாந்தி மாரியப்பன் said...

அழகான படமும் விளக்கமும்.. அருமை.

Unknown said...

நன்றி அமைதிசாரல்.

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

ஆஹா இதை நீங்கள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன். நன்றி நண்பரே

Unknown said...

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் பல.....
இரண்டாம் சுற்று....உங்க கைகளில்
அனைவருக்கும் புதிய ஆண்டின் நல் வாழ்த்துக்கள்

Post a Comment