Pages

குறள்

Tuesday 16 November, 2010

கவிதை எழுதிய கடலோரம்

பாசத்திற்குரிய நமது பாரதிராஜா ஓயாத அலைகளின் கடலோரத்தில் கவிதை எழுத வைத்து சின்னப்பதாசை பாஸ் செய்ய வைத்தது இந்த முட்டம் கடலோர கிராமத்தில்தான்.
மேடும் பள்ளமுமான சாலைகள், உயரமான பாறைகள், செம்மண் சூழ்ந்த நிலபரப்புகள்,
வரவேற்கும் லைட் ஹவுஸ், வளைந்து நெளிந்த கடற்கரை என்று அடுக்கிகொண்டே போகலாம்.
இன்று சுற்றுலா கைவசமுள்ள இந்த வியாபார ராவாரமில்லாத கடற்கரைக்கு வந்து செல்வோர் பலர். 
குமரிக்கு வரும் சினிமாகாரர்களுக்கு ஏற்ற இடம் மட்டுமல்ல. பல சினிமாக்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
அருகில் குன்று போல் குவிந்து கிடக்கும் செம்மண் பாறைகளும் காமெராகாரர்களுக்கு மிகவும் பரிட்சியபட்ட ஓன்று. இங்கு பல சினிமாக்களின் சண்டை காட்சிகள் மற்றும் நடனங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
எங்கள் ஊர் புகைப்படகாரர்கள் திருமண தம்பதியர்களை அழைத்து வந்து புகைப்படமெடுத்து திருமண ஆல்பங்களை அழகு படுத்துவார்கள்.
அபாயமான பாறைகளும் இங்கே உண்டு. சுனாமிக்கு பதம் பார்க்கப்பட்ட ஊர்களில் முக்கிய இடம் பிடித்த பெயரும் உண்டு.
சன்ரைஸ் சன்செட் காண்பதற்கும் மிக அருமையான இடம்.
இங்கே எடுக்கப்பட்ட இந்த பணரோமாவைதான் நாம் பார்க்கிறோம். பணரோமாவை பற்றி ஏற்கனேவே சொல்லப்பட்டுவிட்டது.


5 comments:

ராமலக்ஷ்மி said...

பனோரமா அருமை.

அழகான இடம். பார்த்து ரசித்திருக்கிறேன்... கடலோரக் கவிதைகளில்:))!

Unknown said...

thanks madam

Unknown said...

//இன்று சுற்றுலா கைவசமுள்ள இந்த வியாபார ஆராவாரமில்லாத கடற்கரைக்கு வந்து செல்வோர் பலர்.//
nice words

வானம் said...

என்ன ஆச்சு? ரொம்ப நாளா பதிவு ஒன்னுமில்லையே.

Unknown said...

உண்மைதான். கொஞ்சம் வேலை பளு. "மீண்டு"ம் வருவேன்.

Post a Comment