Pages

குறள்

Monday 1 November, 2010

சேட்டையர்கள்

சேட்டையர்கள் என்றதும் மீண்டும் குழந்தைகளை பற்றி ஏதோ எழுதபோகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். 
காலை நேரங்களில் சிலருக்கு கோழி கூவினால் தான் தூக்கமே  கலையும். எங்கள் வீட்டை சுற்றி கோழிகளை விட அணில் கூட்டங்கள் தான் அதிகம். அவர்களின் கீச்சு குரலில் நம்மை எழுப்பிவிடுவார்கள். 
காலை நேரங்களில் உணவுக்காக ஓடியாடி வேலைபார்ப்பதையும் அப்பப்போ தங்களது சேட்டைகளையும் செய்து நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள். சிலருக்கு மீன் வளர்த்து அதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் கவலைகள் எல்லாம் ஓடோடிவிடும். அதுபோலதான் இவர்களின் சேட்டைகளையும் பார்த்துகொண்டிருந்தால் ஒரு சுகம்.
அதிகாலையில் எழுந்து இவர்கள் நடவடிக்கைகளை படம் பிடிப்பது வழக்கம்.
காலை நேரமாவதால் வெளிச்சங்கள் குறைவாகவே இருக்கும். சூம் லென்சை மாட்டி விட்டு அதன் வேகமான துள்ளல்களை படம் பிடிக்கும் போது ஷேக் ஆகிவிடுவதுண்டு. ISO அதிகமுள்ள கேமராக்களுக்கு  இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இங்கே காணப்பட்டிருக்கும் படங்களை நான் எடுத்த விதமே வேறு! 
பொதுவாக இப்பொழுது காமேராக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு முக்கிய தீப்பெட்டி போன்ற ரிமோட் எனப்படும் கருவிதான் ஒரு பிளஸ் பாயிண்ட் . சில காமேராக்களுக்கு ஒயருடன் கூடிய ரிமோட் கிடைக்கும். சில காமேராக்களுக்கு கார்ட் லெஸ் ரிமோட் கிடைக்கும்.
இந்த ரிமோட்டுகளை பொதுவாக காமெரா அசையாமல்  ஸ்லோ ஷட்டர் பயன்படுத்தும் இடங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதாவது இரவு விளக்குகள், ரோடு விளக்குகள், மூன் லைட் போன்றவற்றை படம் பிடிக்க பயன்படுத்துவது வழக்கம். 
நாம்  அணில்களை படம் பிடிப்பதற்காக காலை நேரத்தில் சூம் லென்சை மாற்றிவிட்டு ஸ்டாண்டில் காமெராவை இணைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்துவிட்டு சிலமணி நேரம் காவல் இருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக நான் வைத்திருந்த ஆகாரத்தை  மோப்பம் பிடித்துகொண்டு வரத்துவங்கினர். நம்மை பார்த்தால்  ஓடிவிடுவார்கள் அதுமட்டுமல்ல காமெராவின் கிளிக் சப்தம் கேட்டாலும் போதும் பறந்தே விடுவார்கள். அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நாம் சூம் லென்சில் எடுத்துவிடலாம் ஆனால் அதை விட நெருக்கமாக நமது கேமராவை கொண்டு செல்வது என்றால் இவர்களுக்கு  நம்மை கண்டால் பயம். இங்கே எனது சூம் லென்சின்  ஆட்டோ போகஸ் இயங்காது. முழுக்க முழுக்க மானுவல்   போகஸ் தான். ரிமோட் பயன்படுத்தும் பொழுது அணில் கொஞ்சம் அங்கே இங்கே என்று இடம் மாறினாலும் ஏமாற்றம் தான் மிச்சம்.
இந்த REMOTE சென்னையில் கிடைக்கிறது. நிக்கான் மற்றும் கானன் காமேராக்களுக்கும் கிடைக்கிறது. சில கேமராக்களுக்கு ஏற்ப மாறுபடுவதால் உங்கள் காமெராவின் மாடல் நம்பரை கூறி வாங்கிகொள்ளலாம்.
காமேராவிலும் ரிமொடிற்கு  என்று ஒரு ஆப்சன் இருப்பதால் அதை போட்டுகொண்டால் தான் ரிமோட் வேலை செய்யும். 
எனது ஆர்குட் பகுதியில் 250 அணில் படங்கள் இணைத்துள்ளேன். ஆனால் அதில் ரிமோட்  பயன் படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை விட ரிமோட் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் அதிகம் இருக்கும்.


7 comments:

மதுரை சரவணன் said...

அணில் எழுப்பி விடும் என்பதில் இருந்து அதை படம் பிடித்த விதத்தை எடுத்துக் கூறுவதில் உங்கள் எழுத்து தொழில் நுட்பத்துடன் இணைந்துள்ளது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

good ones, Mervin Anto! :)

Unknown said...

நன்றி சரவணன் சார், தெகா சார்

ராமலக்ஷ்மி said...

எத்தனை பிரயத்தனங்கள்? ஆச்சரியம்:)! சுவாரஸ்யம். ரிமோட் பற்றிய தகவலுக்கும் நன்றி.

Unknown said...

நன்றி மேடம். இதெல்லாம் சின்ன சின்ன முயற்சிகளே...

Margarita Yui said...

I love how you take the pictures, showing more than a simple picture thanks

Anonymous said...

அணிலே! அணிலே ஓடிவா! அழகு அணிலே ஓடிவா!கொய்யாமரம் ஏறிவா!கொறித்துத் தின்ன ஓடிவா!பாதிப்பழம் உன்னிடம்; மீதிப்பழம் என்னிடம். பங்குபோட்டுத் தின்னலாம். இந்தப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அணிலைப் பற்றிச் சிந்திக்கும்போது.

Post a Comment